தமிழ்நாடு:  



  • திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட புதுமைப்பெண் திட்டதால் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை 27% அதிகரிப்பு - இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பெருமிதம்

  • காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் என ஈரோடு கிழக்கு தொகுதியில் 4 முனை போட்டி - சூடுபிடிக்க தொடங்கிய பரப்புரை 

  • ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் 2ம் கட்டமாக சேலம் மண்டலத்தில் வரும் 15ம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் சுற்றுப்பயணம்

  • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியீடு: ஓபிஎஸ் தந்த பட்டியல் நிராகரிப்பு

  • கடலில் பேனா சின்னம் வைத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என மீனவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

  • எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ, அதைவிட அதிக நம்பிக்கையை 20 மாதங்களில் பெற்றுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

  • காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்ற அமைச்சர் உதயநிதி ‘ அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.

  • ஈரோடு இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு மேலும் 3 மத்திய பாதுகாப்பு படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


இந்தியா:



  • ரெப்கோ வட்டி 6வது முறையாக உயர்வு; வீடு, வாகன கடன் இ.எம்.ஐ மேலும் அதிகரிக்கும் - ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

  • எதிர்க்கட்சிகளின் அவதூறுகள் எங்களை எதுவும் செய்யாது; மக்களின் நம்பிக்கையே பாதுகாப்பு கவசம்- மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு

  • குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகிற பிப்ரவரி 18ம் தேதி மதுரை வருகிறார்.

  • ராகுல் காந்தியின் கருத்துகள் தவறாகவும் இழிவாகவும் அநாகரீகமாகவும் உள்ளது என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.

  • ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தை ஒழுங்கப்படுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வரும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார்.

  • பெரம்பலுர் வழியாக ரயில்பாதை அமைப்பது 50 ஆண்டுகால கனவு என்றும் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முன்வருமா? என எம்பி பாரிவேந்தர் கேள்வி எழுப்பினார்.


உலகம்:



  • துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 11,000 ஐ தாண்டியது

  • பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி இ-2 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது.

  • உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஊழியர்களை வால்ட் டிஸ்னி பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • இலங்கையில் 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற அலுவலகத்தை புத்த துறவிகள் முற்றுகையிட்டனர்.

  • துருக்கியில் கடந்த 36 மணி நேரத்தில் 100 க்கு மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. 

  • அமெரிக்கா, இந்தியா உள்பட பல நாடுகளில் பலூன்கள் மூலம் சீனா உளவு பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


விளையாட்டு: 



  • இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது. 

  • தென்னாப்பிரிக்கா டி20 லீக் - இறுதிப்போட்டிக்கு பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் முன்னேறி அசத்தல்

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் சவாலானது என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.