ABP நெட்வொர்க் - இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. உலகின் மிகப்பெரிய வீடியோ பகிர்வு தளங்களில் ஒன்றாக, யூடியூப்பில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக 59.2 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டு சாதனை படைத்துள்ளது. சமூக ஊடக பகுப்பாய்வில் உலகளாவிய முன்னணி நிறுவனமான சோஷியல் பிளேடின் கூற்றுப்படி, யூடியூப்பில் அதிகம் சந்தாபெற்ற முதல் 10 செய்தி சேனல்களில் ஏபிபி நியூஸ் மற்றும் ஏபிபி லைவ் ஆகியவை இடம்பெற்றுள்ளது. ஏபிபி நியூஸுக்கு 35.2 மில்லியன் சந்தாதாரர்களும், ABPLIVE-க்கு 24 மில்லியன் சந்தாதாரர்களும் உள்ளனர்.
ABP News, இப்போது YouTube உலகில் அதிக சந்தாக்களைக் கொண்டிருக்கும் இரண்டாவது சேனலாக இருந்து வருகிறது. மேலும் ABP நெட்வொர்க், இரண்டாவது அதிக சந்தா பெற்ற செய்தி நெட்வொர்க் ஆக இருந்துவருகிறது. இது உலகளவில் ஊடகத்துறையில் முன்னணி வீரராக ஏபிபியின் நிலையை உறுதிப்படுத்துகிறது.
ABP நியூஸ் மற்றும் ABPLIVE ஆகியவை 19 பில்லியனுக்கும் அதிகமான வீடியோ பார்வைகளைப் பெற்றுள்ளன. சோஷியல் பிளேட்டின் கூற்றுப்படி, செய்திகள் மற்றும் அரசியல் வகையின் கீழ் இந்தியாவில் இரண்டாவது மிக வீடியோ பார்வைகளைக்கொண்ட தளமாக விளங்குகிறது. யூடியூப் கிரியேட்டர் ஸ்டுடியோவின் கூற்றுப்படி, 2022-ஆம் ஆண்டில் அதன் அனைத்து யூடியூப் ப்ராப்பர்டிகளிலும் பதிவுசெய்யப்பட்ட 122 பில்லியன் பதிவுகள் மூலம், ஏபிபி நெட்வொர்க் மக்களிடம் சென்றடைந்ததன் நிஜம் ஊர்ஜிதமாகிறது. தரமான உள்ளடக்கத்தை வழங்குவதில் ABP நெட்வொர்க்கின் அர்ப்பணிப்பு மற்றும் பார்வையாளர்களுடன் இணைவதில் அவர்களுக்கான வெற்றிக்கு இந்த புள்ளிவிவரங்கள் சான்றாக விளங்குகிறது.
ஏபிபி நெட்வொர்க்கின் பிராந்திய செய்தி சேனல்களான ஏபிபி மஜா, ஏபிபி ஆனந்தா, ஏபிபி அஸ்மிதா மற்றும் ஏபிபி கங்கா ஆகியவையும், மக்களைச் சென்றடையும் திறனை விரிவுபடுத்துகின்றன. வளர்ந்து வரும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு ஆழமான மற்றும் இணையற்ற செய்திகளை வழங்குகின்றன. சோஷியல் பிளேடின் கூற்றுப்படி, 10 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டு, மராத்தி மொழியில் அதிக சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது நிறுவனமாக ABP Majha விளங்குகிறது.
ABP ஆனந்தா 8 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் மற்றும் 3 பில்லியன்+ லைஃப்டைம் பார்வைகளுடன் வலுவாக உள்ளது. இது அதிக சந்தாதாரர்களுடன், அதிகம் பார்க்கப்பட்ட பெங்காலி செய்தி சேனலாக உள்ளது. 700 மில்லியனுக்கும் அதிகமான லைஃப்டைம் பார்வைகளுடன், அதிகம் பார்க்கப்பட்ட குஜராத்தி செய்தி சேனலாக ஏபிபி அஸ்மிதா உள்ளது.
சோஷியல் பிளேடின் கூற்றுப்படி, மார்ச் 10, 2022-இல் வெளியான அறிக்கையின்படி, ABP நெட்வொர்க்கின் ஆழமான மற்றும் விரிவான செய்தி கவரேஜை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு 2022 உத்தரப் பிரதேசத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டது. ABP கங்கா 97,769,865 பார்வைகளைப் பெற்று செய்தி சேனல்களின் லீடர்போர்டில், அதன் போட்டி சேனலை மூன்று மடங்கு விஞ்சியது.
டிசம்பர் 8, 2022, அன்று குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நாளில், சிறந்த செய்தி போட்டியாளர்களிடையே YouTube-இன் நேரடி ஸ்ட்ரீமில், அதிக நிகழ்நேர தகவலில், ஒரே நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்றதன் மூலம் ABP News குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
59.2 மில்லியன் சந்தாதாரர்கள் என்னும் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதும், அதைக்குறித்து ABP நெட்வொர்க்கின் CEO திரு அவினாஷ் பாண்டே பேசும்போது: “இந்த முக்கியமான சாதனை, நாம் டிஜிட்டல் உலகில் முதன்மையானவர்களாகவும், புத்தாக்கத்துடன் சிறப்பானவர்களாகவும் மாறிவரும் நம் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். நம் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், மாறிவரும் காலத்தோடு தொடர்ந்து முன்னேறி, தலையாய இடத்தில் நான் இருக்க முடியும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். எல்லைகளைத் தாண்டி நமது நெட்வொர்க் அதன் அனைத்து பண்புகளிலும், தளங்களிலும் வலுவான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்வதை உறுதி செய்வதில் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். சிறப்பான இடத்தை நோக்கிய நகர்வில் எடுக்கவேண்டிய முயற்சிகளை நாம் கைவிடப்போவதில்லை
ஆழமான, புதுமையான உத்தியுடன், ABP நெட்வொர்க் வரும் ஆண்டுகளில் அதன் அனைத்து தளங்களிலும் சிறப்பான வளர்ச்சியை முன்னெடுக்கும் என்பதை நாம் நம்புகிறோம்" என்றார்.