தமிழ்நாடு:
- சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு வருகின்ற 12ம் தேதி ஆர்ப்பாட்டம் : திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவிப்பு
- மக்கள் குறை தீர்ப்பதில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு பாராட்டுக்குரியது: முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்
- கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டி: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
- தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 11 ஆயிரமாக உயர்த்த முடிவு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
- தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன் : பாஜக மூத்த தலைவர் எச். ராஜா அறிவிப்பு
- தூத்துக்குடிக்கு சென்று உங்களால் இந்த கருத்தை பேச முடியுமா?" என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
- அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட சிறப்பு வழக்கறிஞராக கிரண் எஸ்.ஜாவலியை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு பகுதியில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர் என்ற காரணத்துக்காக, தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறுவது தவறு என்று டிஎன்பிஎஸ்சி மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா:
- சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
- கொரோனா அதிகரிக்கும் நிலையில் மாநில அரசுகள் விழிப்புடன் தயாராக இருக்க வேண்டும் : ஆய்வு கூட்டத்தில் மத்திய அமைச்சர் மாண்டவியா வலியுறுத்தல்
- வயநாட்டில் உள்ள ராகுல்காந்தி எம்பி அலுவலக டெலிபோன் இணைப்பு : இண்டர்நெட் வசதியும் நிறுத்தம்
- கிச்சா சுதீப்பின் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பதியில் கடந்த மார்ச் 1 முதல் 31ம் தேதி வரையில் மட்டும், 20 லட்சத்து 57 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒத்த கருத்துள்ள கட்சி தலைவர்களை இணைக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.
உலகம்:
- வங்காளதேசத்தில் இருதரப்பினரிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
- போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய செயலி ஒன்றை உக்ரைன் அரசு அறிமுகப்படுத்தியது.
- ட்விட்டரின் லோகோவை மீண்டும் குருவியாக மாற்றியுள்ளார் எலன் மஸ்க்.
- திபெத்தில் 4.6 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- பாகிஸ்தானில் சிலிண்டர் கேஸ் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
விளையாட்டு:
- ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்னை-மும்பை அணிகள் இன்றிரவு பலப்பரீட்சை நடத்துகின்றன.
- ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று மாலை 4 மணிக்கு மோத இருக்கின்றன.
- சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12-ந்தேதி சென்னை-ராஜஸ்தான் அணிகள் இடையிலான போட்டிக்கான டிக்கெட் நாளை முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.