இடுக்கியில் நடந்த கோவில் திருவிழாவின் போது குடிபோதையில் இருந்த கேரள போலீஸ்காரர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சீருடைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட அதிகாரி மீது காவல் துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.


கேரளாவில் நடந்த சம்பவம்


எல்லோர் கையிலும் மொபைல் இருப்பதால் உண்மைகளை மாற்றி எழுதும் போக்கு குறைந்து வருகிறது. அதில் பல குற்றங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. அது போல தமிழ் பக்திப் பாடலான "மாரியம்மா… மாரியம்மா…", பாடலுக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் சீருடையில் நடனம் ஆடும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் பார்த்த பலரும் அது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று நினைத்தனர். ஆனால் விசாரணையில் அது கேரள மாநிலத்தில் நடந்த சம்பவம் என்று தெரிய வந்துள்ளது.



குடிபோதையில் ஆட்டம் போட்ட எஸ்.ஐ.


காணொளியில், கோவில் மைதானத்தில் கடமையாற்றும் போலீஸ் குழுவை வழிநடத்தும் பணியிலிருந்த எஸ்.ஐ.ஷாஜி, தமிழ் பக்தி பாடல் ஒன்றைப் பாடுவதைக் காண முடிகிறது. நிதானம் இழந்த அவரை அங்கு சூழ்ந்திருந்த மக்களில் சிலர் வந்து கட்டுப்படுத்தி வெளியில் அழைத்து சென்றுள்ளனர். இருப்பினும் இந்த வீடியோ வெளியானதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Bhanuka Rajapaksa Injury: முழங்கையிலே ஓங்கி அடித்த தவான்..! 1 ரன்னில் பெவிலியனுக்கு நடையை கட்டிய பனுகா ராஜபக்சே..!


பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி


பூபாறை மாரியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மது அருந்திவிட்டு நடனமாடியுள்ளார். அதனை அருகில் இருந்து பார்த்த பலர் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பலர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.






அதிகாரி பணி இடை நீக்கம்


இந்நிலையில், குடிபோதையில் நடனமாடிய குற்றத்திற்காக சந்தனபாறை காவல் நிலைய கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர் கே.பி.ஷாஜி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூணாறு டி.எஸ்.பி மற்றும் காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் அறிக்கையும் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மது அருந்திய சம்பவம் பலரை அச்சுறுதியுள்ளது.