தமிழ்நாடு:



  • டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்புக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

  • தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 

  • சனாதன விவகாரம் குறித்து பொதுவெளியில் விவாதிக்க தயாரா என  பா.ஜ.கவிற்கு திமுக எம்.பி., ஆ.ராசா சவால்

  • சென்னையில் மத்திய அரசின் ‘விஸ்வகர்மா’ திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் 

  • விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்கும் என அறிவிப்பு 

  • 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட நாங்கள் தயார் - அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி.தினகரன் திட்டவட்டம்

  • வார விடுமுறையை முன்னிட்டு 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு 

  • சேலத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி 

  • சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் திருச்சூர் பிரிவு தலைவர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது 

  • சனாதனத்தை ஒழிப்போம் என வாக்குறுதி கொடுத்து தேர்தலை சந்திக்க தயாரா என அமைச்சர் உதயநிதிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சவால்


இந்தியா:



  • நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார்  என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல்

  • நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம் - குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வழிபாடு

  • மக்களை திசை திருப்ப பாரதம் சர்ச்சையை பாஜக எழுப்புவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்

  • சனாதன தர்மம் பற்றி பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தகவல்

  • ஜி20 மாநாட்டை முன்னிட்டு போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் டெல்லி -  வியாபாரம் மற்றும் போக்குவரத்துக்கு தடை, கடும் கட்டுப்பாடுகளும் விதிப்பு

  • முதல் நாள் பழைய கட்டடத்திலும், 2வது நாளில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு 

  • தமிழகத்துக்கு செப்டம்பர் 12ஆம் தேதிக்கு பிறகு காவிரி நீரை திறந்துவிடுவது சாத்தியமில்லை என உச்சநீதிமன்றத்தில் தகவல் 

  • காவிரி பிரச்சினை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் பேச வேண்டும் என்று கர்நாடக விவசாயிகள் கோரிக்கை


உலகம்:



  • ஜி20 மாநாட்டில் பங்கேற்க இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - நாளை பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை 

  • அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக முக்கிய குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்து நீதிமன்றம் தீர்ப்பு

  • எகிப்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழப்பு 

  • நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிற்பதை படம் பிடித்த நாசாவின் லூனார் ஆர்பிட்டர் - புகைப்படம் வெளியீடு 

  • உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு 


விளையாட்டு:



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், கோகோ காப் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேற்றம் 

  • ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி 

  • கிரிக்கெட் சூதாட்ட புகாரில் இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சசித்ரா செனநாயகே கைது

  • ஆசிய டேபிள் டென்னிஸ் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய ஆண்கள் அணி

  • உலகக்கோப்பை அணியில் யுஸ்வேந்திர சாஹல் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து