தமிழ்நாடு:
- ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி - பாதுகாப்பு காரணங்களாக ட்ரோன்கள் பறக்க தடை.
- சென்னையில் ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி - மயிலாப்பூரில் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்பு
- கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
- கடந்த 320 நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- பால் விலை 3 மாதங்களில் 2ஆவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்தும் கடமை தமிழக அரசுக்கு இல்லையா எனவும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
- தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை 9,76,089 மாணவர்கள் எழுதுகின்றனர்.
- டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்பட அரசியல் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
- அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்.(IITM) திட்டத்தின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்களை வழங்கினார்.
இந்தியா:
- நாடு முழுவதும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் செயல்களில் ஈடுபட்டபோது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- கடந்த ஏழு ஆண்டுகளில் 1.8 லட்சத்துக்கும் அதிகமான தொழில்முனைவோர் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். வழங்கப்படும் கடன்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக கிச்சா சுதீப் களமிறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சாவர்க்கர் பற்றி அவதூறு பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி வலியுறுத்தல்
- என்.சி.இ.ஆர்.டி. 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தி பற்றிய வரிகள் நீக்கப்பட்டதாக சர்ச்சை
- அனுமன் ஜெயந்தி கொண்டாட்டத்தில் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
- கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 125 தொகுதிகளுக்கான பா.ஜ.கவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
- பந்திப்பூர் புலிகள் காப்பக 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகிற 8-ந்தேதி மைசூருவுக்கு வருகிறார்.
உலகம்:
- ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஜாமீனில் வெளிவந்தார்.
- அருணாசலபிரதேச விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
- பப்புவா நியூ கினியாவில் நேற்று 4.3 என்ற ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் சமூகத்துக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
- ஆப்கான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தடை விதித்து தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
விளையாட்டு:
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது
ஐசிசி ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் ஒரு ஒடம் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.