தமிழ்நாடு:



  • இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 பேர் அடங்கிய குழு அமைப்பு : பள்ளிக்கல்வித்துரை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

  • பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைய சகித்துக் கொள்ள முடியாது; அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் - மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது முறிந்ததுதான் - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

  • அதிமுக ஆட்சியில் சாலை போடாமல் மதுரை துணை மேயர் முறைகேடு?- முரண்பாடு உள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க நீதிமன்ற கிளை உத்தரவு

  • விழுப்புரத்தில் நவாரத்தி விழாவிற்கு 35 வடிவிலான கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

  • பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை இரண்டு வார காலம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  • தற்காப்பாக இருக்கும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கே டெங்கு காய்ச்சல் வந்துவிட்டது. டெங்கு கொசுக்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


இந்தியா: 



  • சிக்கிமில் பயங்கர மேகவெடிப்பு : 22 ராணுவ வீரர்கள் உட்பட 69 பேர் வெள்ளப்பெருக்கில் மாயம் - 8 பேரின் சடலங்கள் மீட்பு 

  • உபா சட்டத்தில் கைதான நியூஸ் க்ளிக் ஆசிரியருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்

  • மகாராஷ்டிராவில் உள்ள இரண்டு மருத்துமனைகளில் 31 பேர் உயிரிழந்த விவகாரத்தை தாமாக முன்வந்து நேற்று விசாரித்தது மும்பை உயர்நீதிமன்றம்.

  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  • உலக விலங்குகள் தினமான நேற்று, செல்ல நாய் ஒன்றை, தனது தாயாருக்கு அன்பு பரிசாக வழங்கியுள்ளார் ராகுல் காந்தி.

  • டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

  • உஜ்வாலா திட்ட சமையல் கேஸ்  சிலிண்டர் விலையை மேலும் ரூ.100 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


உலகம்: 



  • அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு - 5 மாணவர்கள் காயம்.

  • அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  • சீன தொழிற்சாலையில் விஷவாயு தாக்கு 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு.

  • வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மருந்து இறக்குமதிக்காக இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் செய்ய இருக்கிறது. 

  • சிறையில் இம்ரான் கான் விஷம் வைத்து கொல்லப்படலாம் என அவரது வழக்கறிஞர் அச்சம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். 


விளையாட்டு:



  • ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 81 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

  • உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று பிரமாண்டமாக தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து பலப்பரீட்சை.

  • ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிஷோர்குமாருக்கு ரூ.1½ கோடி பரிசு - ஒடிசா முதலமைச்சர் அறிவிப்பு.

  • ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கம் வென்று அசத்தல். 

  • இந்திய மல்யுத்த வீரர் சுனில் குமார் 87 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சாதனை படைத்துள்ளது.