தமிழ்நாடு:
- ஒரே நாடு ஒரே தேர்தல் மூலமாக அதிபர் ஆட்சியை கொண்டு வர சதி - முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
- சனாதனம் பற்றி பேசுவதை நிறுத்தப்போவதில்லை: அமைச்சர் உதயநிதி உறுதி - தமது பேச்சால் பலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக விமர்சனம்
- தமிழ்நாட்டில் நீலகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை - குமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை
- காஞ்சிபுரத்தில் விடாது பெய்த கனமழை - முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் புரட்சி பயண பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
- ராகுல் காந்தி யாத்திரை ஓர் ஆண்டு நிறைவு - மாவட்டந்தோறும் பேரணி நடத்த காங்கிரஸ் முடிவு
- திமுக, அதிமுக உடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டை போன்றது - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
இந்தியா:
- 2047ல் வளர்ந்த நாடாக மாறும் ஊழல், ஜாதி, மதவாதத்துக்கு இந்தியாவில் இடம் இல்லை: பிரதமர் மோடி திட்டவட்டம்
- ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு பணிகளை துவங்கியது ராம்நாத் கோவிந்த் குழு: உறுப்பினர் பதவியை ஏற்க ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு
- ஜி-20 மாநாடு நடைபெற உள்ளதால் கண்காணிப்பு வளையத்தில் டெல்லி - தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கணகாணிப்பு
- ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிரா அரசு ராஜினாமா செய்ய வேண்டும் - ஆதித்யா தாக்ரே வலியுறுத்தல்
- மணிப்பூர் கலவரத்தை ஒடுக்க பாகிஸ்தானுக்கு எதிரான சர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்திய நிபுணர் நியமனம்
- சனாதனம் தொடர்பான பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வலியுறுத்தல்
- ஜீ குழுமத்துக்கு வழங்கிய மொத்த கடன் தொகையான ரூ.6,500 கோடியில் ரூ.5,000 கோடியை தள்ளுபடி செய்தது யெஸ் வங்கி
உலகம்:
- உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் - அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவு
- உக்ரைன் போர் எதிரொலி - நோபல் பரிசு விழாவில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரானுக்கு அழைப்பு இல்லை என அறிவிப்பு
- டொனால்டு டிரம்புடன் கொள்கை ரீதியாக நல்ல உடன்பாடு உள்ளது - அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முயலும் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேச்சு
- ஹைகுவி புயல் எதிரொலி - தைவானில் 45 விமானங்கள் ரத்து
- ஹிட்லரின் இனவெறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு - 80 ஆண்டுகால வழக்கில் தீர்ப்பு
- அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணையை நிலைநிறுத்தியது ரஷ்யா - அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
விளையாட்டு:
- ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்தியா - நேபாளம் அணிகள் இன்று மோதல்
- அமெரிக்கா ஓபன் டென்னிஸ் - டியாபோ, கோகோ காப் காலிறுதிக்கு முன்னேற்றம்
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
- ஜிம்பாப்வே அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணம் - பிரபலங்கள் இரங்கல்
- கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் நட்சத்திர வீரர் ரொனால்டோ - அல் ஹசம் அணிக்கு எதிரான போட்டியில் 850வது கோலை பதிவு செய்தார்