தமிழ்நாடு:



  • நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உள்நோக்கத்துடன் செயல்படும் தீய சக்திகளை கண்காணித்து தடுக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

  • கனமழை எதிரொலி - கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

  • கல்வியின்‌ முக்கியத்துவத்தை உணர்ந்து, போராடும்‌ ஆசிரியர்களின்‌ கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை ஓ.பன்னீர்செல்வம்‌ வலியுறுத்தி உள்ளார். 

  • அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய R.B.V.S. மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

  • கரூரில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி மறுத்தால் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என மாட்டு வண்டி தொழிலாளர் அறிவிப்பு.

  • கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.

  • காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு திரும்ப பெறப்பட்டது.

  • சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

  • கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேச்சு

  • விவசாயியை எட்டி உதைத்த கொடூரம் - கிராம ஊராட்சி செயலாளரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு


இந்தியா:



  • அமித்ஷா, நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு - மாநில தலைவர் பதவியில் மாற்றம் இல்லை என அறிவிப்பு

  • அக்டோபர் 10ம் தேதிக்குள் 42 தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க கனடாவுக்கு உத்தரவு - இந்தியா அதிரடி நடவடிக்கை

  • பெண்ணையாறு விவகாரத்தில் அவகாசம் கொடுத்தும் புதிய நடுவர் மன்றம் அமைக்காதது ஏன்..? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

  • தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களான உத்திர பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் நேற்று நில அதிர்வு ஏற்பட்டது.

  • மகாராஷ்ராவில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • உடைந்து போன ஜனதா கட்சிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அதில் இணைய தான் விரும்பவில்லை என்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.


உலகம்: 



  • தாய்லாந்தில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் உயிரிழப்பு. மருந்து இறக்குமதிக்காக இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் செய்யவுள்ளது.

  • இத்தாலியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - 21 பேர் உயிரிழப்பு.

  • சர்வதேச நாணய நிதியம் சுமார் ரூ.5 ஆயிரத்து 800 கோடியை பாகிஸ்தானுக்கு கடனாக வழங்க உள்ளது.

  • நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 29 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

  • அமெரிக்காவில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை வருகிற 14-ந்தேதி திறக்கப்பட இருக்கிறது. 


விளையாட்டு: 



  • 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகக்கோப்பைக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை சர்வதேச தூதராக ஐசிசி நியமனம் செய்துள்ளது.

  • இந்திய அணி ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட விளையாடமுடியாத சூழலில் நேரடியாகவே உலகக்கோப்பையில் களம் காணவுள்ளது.

  • இரானி கோப்பையை வென்று அசத்தியது ரெஸ்ட் ஆப் இந்தியா.

  • ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது - ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தல்.

  • ஆசிய விளையாட்டு போட்டி: பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்