தமிழ்நாடு:
- கூட்டாட்சி, சமதர்மம், சமத்துவத்தை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் - சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
- வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் கூடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- பல் பிடுங்கிய விவகாரத்தில் காவல்துறை உயரதிகாரிகள் 2 பேர் பணியிட மாற்றம் - நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
- கலாஷேத்ரா கல்லூரி பாலியல் தொல்லை விவகாரத்தில் 5 பேர் பணி நீக்கம் - கல்லூரிக்கு வரப்போவதில்லை என மாணவிகள் திட்டவட்டம்
- கலாஷேத்ரா விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை தலைமைச் செயலாளரிடம் தாக்கல் - பாலியல் தொல்லை புகாரில் கைதான பேராசிரியர் ஹரி பத்மனுக்கு நீதிமன்ற காவல்
- நாகர்கோவிலில் காங்கிரஸ் - பாஜகவினர் மோதல் : ஒருவர் மீது ஒருவர் சரமாரி கல்வீச்சு - நெடுஞ்சாலையில் மறியல்
- ஒருசிலரைத் தவிர கட்சியில் இருந்து சென்ற அனைவரும் அதிமுகவுக்கு திரும்ப எடப்பாடி பழனிசாமி அழைப்பு
- தமிழ்நாட்டு மக்கள் உணர்வோடு இருக்கும் வரை சனாதன சக்திகள் காலூன்ற முடியாது - ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு
- காரைக்காலில் ஓராண்டுக்குப் பின் கொரோனாவால் உயிரிழந்த பெண் - பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
- தமிழ்நாட்டில் பல இடங்களில் வெப்பத்தை தணித்த கோடை மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
- உறுதித் தன்மை இல்லாததால் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான தூண்கள் இடிக்கப்படும் என துறைமுக ஆணைய தலைவர் பேட்டி
- தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 20 ஆம் தேதி இறுதி விசாரணை - இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி - நடிகர் ஆர்.கே.சுரேஷூக்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நோட்டீஸ்
இந்தியா:
- சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக நாடு முழுவதும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
- கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த நபரின் வரைபடம் வெளியீடு - பயங்கரவாதிகள் சதியா என்ற கோணத்தில் விசாரணை
- வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய விவகாரம் - யூட்யூபர் மணிஷ் காஷ்யப்பை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு
- பிரதமர் மோடியின் கல்விச்சான்றிதழ் குறித்து ஆம் ஆத்மி கட்சி மீண்டும் கேள்வி - தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தினால் பதவி பறிபோகும் என கருத்து
- இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சிபிஐயின் முக்கிய கடமை என வைர விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
- 2 நாள் பயணமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் இந்தியா வருகை - பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை
உலகம்:
- ஆப்பிரிக்காவின் புருண்டியில் வெள்ளத்தில் சிக்கி 13 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழப்பு
- அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
- வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா கடற்படைகள் கூட்டுப்போர் பயிற்சி
- அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பஸ் டயரில் சிக்கி இந்தியர் உயிரிழப்பு
விளையாட்டு:
- ஐபிஎல் தொடர் : லக்னோவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
- ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை