தமிழ்நாடு:



  • உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி வேண்டும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தல்

  • லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

  • பட்டியலின மக்களின் உரிமைகளை தவிர மற்ற வழக்கில் தேசிய எஸ்.சி.எ.டி ஆணையத்துக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

  • தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க அரசியலைப்பு சட்டத்தில் திருத்தம் வேண்டும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேச்சு

  • தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

  • போதைப்பொருள் ஒழிப்பில் அனைவரும் கைகோர்த்திடுவோம்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • விழுப்புரம் : உயர்கல்வியில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 27 சதவிகிதம் உயர்ந்துள்ளது - அமைச்சர் பொன்முடி பேச்சு

  • கச்சத்தீவில் சிங்கள ராணுவத்தினர் திடீரென புத்தர் சிலையை நிறுவியிருப்பது தமிழர்கள் மத்தியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

  • தமிழ்நாட்டில் சட்ட கட்டிடங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் பிற மாநிலங்களை விட மேம்பட்ட நிலையில் உள்ளது என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்தார்.


இந்தியா:



  • மீண்டும் அதிகரிக்கும் தொற்று; நாடு முழுவதும் ஏப்ரல் 10, 11ல் கொரோனா தடுப்பு ஒத்திக்கை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

  • மோடி-அதானி தொடர்புகளை பேசியதால் தகுதி நீக்கம்; சிறை செல்ல அஞ்ச மாட்டேன் - ராகுல் காந்தி ஆவேச பேட்டி

  • எம்பி., எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

  • பங்குனி உத்திர விழாவுக்கு சபரிமலை ஐப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக தேவஸ்தானம்  அறிவித்துள்ளது.

  • ராகுல்காந்தி இதுபோன்று தொடர்ந்து பேசினால் அவர் தெருவில் நடமாடுவது கடினமாகிவிடும் என ஏக்நாத் ஷிண்டே பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

  • ராஜஸ்தானில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


உலகம்:



  • அமெரிக்க மாகாணத்தில் ஏற்பட்ட புயலால் 26 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அமெரிக்க உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது.

  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் நீதிமன்றம் ஜாமீன் திங்கட்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டது.

  • செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் புதிய அணு ஆயுதத்தை கடலுக்கு அடியில் பரிசோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.


விளையாட்டு:



  • மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

  • மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப்பில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்றுள்ளார்.

  • உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 81 கிலோ எடைப் பிரிவில் ஸ்வீட்டி போரா இந்தியாவுக்காக இரண்டாவது தங்கம் வென்றுள்ளார்.

  • ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் திங்கட்கிழமை அதாவது எதிர்வரும் 27ம் தேதி விற்பனை தொடங்கவுள்ளது.

  • மத்திய பிரதேசத்தில் போபாலில் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில்  இந்திய வீரர் ருத்ராங்க்ஷ் பாட்டீல் வெண்கல பதக்கம் வென்றார்.