தமிழ்நாடு
- ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வாக்கு சேகரிக்கிறார்..கோவை வழியாக சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் இன்று மாலையுடன் ஓய்கிறது பரப்புரை: இறுதிக்கட்ட பரப்புரையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரம்
- முன்னள் முதலமைச்சர் ஓபிஎஸ்ஸின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார் - முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்
- பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழு தீர்மானங்களின் அடிப்படையில் அதிமுக கட்சி விதிகளில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது - தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்
- அதிமுகவை யாராலும் அபகரிக்கவோ, அழித்துவிட முடியாது: ஒருங்கிணைந்த அதிமுகவாக 2024 தேர்தலை எதிர்கொள்வோம் - சசிகலா
- டி.என்.பிஎஸ்.சி ஒருங்கிணைந்த குரூப்-2 தேர்வு இன்று நடைபெறுகிறது. 5,446 பணிகளுக்கு 55 ஆயிரத்து 71 பேர் போட்டி
- தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
இந்தியா
- பாதுகப்பான, நம்பகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது - ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
- சத்தீஷ்கர் மாநிலம் நவாய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு தொடங்கியது.
- தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மாநில சட்டப்பேரவையில் அறிவிப்பு
- மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் உள்ளிட்ட 2 நகரங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு அனுமதி
- கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலா 10 கிலோ அரிசி இலவசம் - முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா
- அதானி சர்ச்சை குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தடையில்லை:வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
உலகம்:
- உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வாக்கெடுப்பு - இந்தியா உள்ளிட்ட 32 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை
- அடுத்தடுத்து நான்கு ஏவுகணை விண்ணில் செலுத்தி வடகொரியா பரிசோதனை - 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகள் துல்லியமாக தாக்கி அழிப்பு
- ஜெமனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இன்று இந்தியா வருகை - பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை
- அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் சாலையில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உடல் கருகி பலி
விளையாட்டு
- மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்ரிக்கா அணி வெற்றி - நாளை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா உடன் மோதல்
- கத்தார் ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றது போபண்ணா ஜோடி
- இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின் பயிற்சியாளர் பார்க் டே சாங்கே பதவி விலகல் - சிந்துவின் சமீப கால மோசமான ஆட்டத்திற்கு பொறுப்பேற்றார்.
- இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டனாக ஸ்மித் நியமனம்