தமிழ்நாடு:
- வேட்பாளரை வாபஸ் பெற்ற நிலையில் சென்னையில் இன்று ஓபிஎஸ் ஆலோசனை: இடைத்தேர்தல் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.
- மாநிலம் முழுவதும் காவல் நிலையங்களில் 2,300 வரவேற்பு அதிகாரிகள் நியமனம்- டிஜிபி சைலேந்திர பாபு தகவல்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல விடுதிகளில் மாணவர்களின் கல்வி மேம்பட ‘டிஜிட்டல் தகவல் பலகை’
- ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
- காங்கிரஸ் கட்சியை ஆதரித்து நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
- கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு சம்பவம்: தமிழக மீனவரின் உடல் ஒப்படைப்பு
- அன்புஜோதி ஆசிரமத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை - முக்கிய ஆவணங்கள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- "நானும் ஒரு விவசாயி குடும்பம் தான்" வயல்வெளில் பார்த்தினிய செடிகளை களையெடுத்த கூட்டுறவு கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணன்
- பட்ஜெட் கூட்டத் தொடரில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் நடைபெறும் - ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை
இந்தியா:
- நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைகோள்கள் விண்ணில் பாய்ந்தன.
- சிவசேனா கட்சியின் சின்னத்தை பெற ஷிண்டே அணி ரூ2000 கோடி லஞ்சம் - உத்தவ் தாக்கரே ஆதரவு எம்பி பரபரப்பு குற்றசாட்டு
- கடந்த ஓராண்டில் 15,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியா புதிய சாதனை - மத்திய அரசு தகவல்
- இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டிங் சர்வீஸில் (டிசிஎஸ்) பணி நீக்கம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- விருப்பமில்லாத பெண்ணை வா வா என அழைத்தாலும் பாலியல் குற்றம்தான் என, மும்பை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
- இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் வெள்ளிக்கிழமை பிப்ரவரி மாதத்தின் வெப்பமான இரவு, குறைந்தபட்ச வெப்பநிலை 14.4 டிகிரியாக பதிவானது என உள்ளூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- உடை சாராமல் உடல் உறுப்பை குறிப்பிடாமல் தோற்றத்தை குறித்தோ அல்லது அவரின் நடையை குறித்தோ கருத்து தெரிவிப்பது பாலியல் ரீதியான கருத்துகளாக கருத முடியாது என டெல்லி நீதின்றம் தெரிவித்துள்ளது.
உலகம்:
- சஹாரா பாலைவனத்தில் உள்ள 1.2% நிலப்பகுதியை வைத்து உலகத்துக்கே மின்சாரம் வழங்க முடியும் - அணுசக்தி நிபுணர் மெஹ்ரான் மொலேம்
- சிரியாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
- நாடு முழுவதும் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் கியூபாவின் 11 மாகாணங்கள் இருளில் மூழ்கியது.
- அமெரிக்க அரசு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பலூனை சுட்டு வீழ்த்த ரூ.3.63 கோடி செலவழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு:
- மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர்: அயர்லாந்து அணியை இன்று சந்திக்கிறது இந்திய அணி.
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட்கோலி படைத்துள்ளார்.
- ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- பெங்கால் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சவுராஷ்ட்ரா அணி ரஞ்சிக்கோப்பையை 2வது முறையாக கைப்பற்றியுள்ளது.
- ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான போட்டியில் மன்கட் முறையில் அவுட் செய்ய முயற்சி செய்த அஸ்வின் செயலுக்கு கை தட்டி சிரித்த விராட் கோலியின் வீடியோ வைராலாகியுள்ளது.