தமிழ்நாடு: 



  •  


  • மழை காலத்தில் தூய்மை பணியாளர்களின் பணியானது பாராட்டுக்குரியது, மகத்தானது - முதலமைச்சர் ஸ்டாலின்




  • குட்கா தடை தொடர்பாக தனி தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்



  • ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுதாக்கல் நேற்று துவங்கியது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு

  • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க  பிப்.15ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு 


  • கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன் என கருத்துக் கேட்பு கூட்டத்தில் சீமான் பேச்சு. 



  • பாஜகவின் முடிவுக்காக  அதிமுக காத்திருக்கட்டும் பரவாயில்லை - நாராயணன் திருப்பதி

  • 2022-2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவிப்பு

  • வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  - வானிலை ஆய்வு மையம் 


இந்தியா:



  • குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று  மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்

  • பாராளுமன்றத்தில் இன்று மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் 

  • தொடர்ந்து ஐந்தாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். 


  • “ஒன்றரை வருடத்தில் தேசிய கல்விக்கொள்கை அமலுக்கு வரும்” - மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தகவல்




  • நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்



  • எதிர் கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம் - பிரதமர் மோடி 

  • ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினத்தினை அறிவித்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

  • முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் சாந்தி பூஷன் தனது 97வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழப்பு


 


உலகம்:



  • பெஷாவரில் நடைபெற்ற பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 83ஆக உயர்வு

  • கனடாவில் உள்ள பிராம்ப்டனில் கவுரிசங்கர் மந்திர் என்ற இந்து கோவிலை மர்மகும்பல் ஒன்று சேதப்படுத்திய சம்பவத்தால் அதிர்ச்சி


 


விளையாட்டு:



  • இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று தொடக்கம்


  • லக்னோவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் மோசமான பிட்சை தயார் செய்த பிட்ச் கியூரேட்டர் சுரேந்தர் குமார் பதவி நீக்கம் - பிசிசிஐ




  • இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விலகுவதாக அறிவிப்பு