தமிழ்நாடு:
- குணச்சித்திர நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் காலமானார்: திரைநட்சத்திரங்கள், ரசிகர்கள் இரங்கல்
- நீட் நுழைவுத்தேர்வு மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது: நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு
- வாக்குப்பதிவிற்கு ஒரு வாரமே இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் களைகட்டும் தேர்தல் பரப்புரை: அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
- தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவாராத்திரி உற்சாக கொண்டாட்டம்: இசை நிகழ்ச்சிகளுடன் விடிய விடிய ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்
- கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி கொண்டாட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் பங்கேற்பு
- கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக அறிவித்து அரசாணை: தகுதியுள்ள அல்லது சிறப்பு விடுப்பாக வழங்க அனுமதி
- நாகை அருகே சீரூடையில் சாராயம் கடத்திய பெண் போலீஸ் உட்பட 6 பேர் கைது: புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்திவர பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் பறிமுதல்
இந்தியா:
- மோடிக்கு சேவகம் செய்யும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது: மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே விமர்சனம்
- பங்கு விலை சரிந்தபோது எல்.ஐ.சி., அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நெருக்கடி கொடுக்கப்பட்டதா? அதானியை காப்பாற்ற முயல்வது ஏன் என ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
- தமிழ்நாட்டிற்கான ரூ.1,200 கோடி ஜிஎஸ்டி நிலுவைத்தொகை விடுவிப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- பென்சில், ஷார்ப்னர் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 18%-லிருந்து 12% ஆக குறைப்பு - நிர்மலா சீதாராமன்
- 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- தென்னாப்ரிக்காவில் இருந்து 12 சிவிங்கப்புலிகள் இந்திய வருகை: மத்திய பிரதேசத்தில் உள்ள பூனோ தேசிய பூங்காவில் பராமரிக்க திட்டம்
- ஜார்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்றார் தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன்: மாநில வளர்ச்சிக்கு ஆளுநரின் வழிகாட்டுதல்கள் உதவியாக இருக்கும் என மாநில முதலமைச்சர் நம்பிக்கை
உலகம்:
- அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சந்தித்து பேசினார்: முனீச் நகரில் நடந்த கருத்தரங்கில் சந்திப்பு
- சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல்: பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 53 பேர் பலி
ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி வேலை நிறுத்தம்: ஒரே நாளில் சுமார் 2,300 விமான சேவைகள் ரத்து
- பிரேசிலில் தொடங்கியது சம்பா நடன திருவிழா: பாரம்பரிய உடையணிந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கலைஞர்கள் அணிவகுப்பு
- பாகிஸ்தானின் கராச்சியில் காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் - 5 தீவிரவாதிகள், 4 போலீசார் பலி
விளையாட்டு
- மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி: நாளைய ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற முனைப்பு
- இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் முன்னிலை: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல்-அவுட்
- இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தடுமாற்றம்..326 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்கையில் 68 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தது
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில், அமெரிக்காவின் ஜெசிகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்