தமிழ்நாடு:
- நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம் - படையல் பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்த கூட்டம்
- தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடு, தீண்டாமை ஒழியவில்லை - ஆளுநர் ரவியின் பேச்சால் சர்ச்சை
- தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
- நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஒன்றிய நீர்வள அமைச்சரை இன்று சந்திகிறது தமிழக குழு - அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்ற குழுவில் 14 பேர் இடம்பெற்றுள்ளனர்
- காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது - காணொலி வாயிலாக நடைபெறும் என தகவல்
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநாகரில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 10 ஆயிரம் போலீசார்
- இருசக்கர வாகனத்தில் சாகச முயற்சியின் போது விபத்தில் சிக்கிய யூடியூபர் டிடிஎஃப் வாசன் - காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
இந்தியா:
- பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கூடுகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் - அறிவிக்கப்படாத முக்கிய மசோதக்கல் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு
- மல்லிகர்ஜுன கார்கே தலைமையில் இன்று இந்தியா பிரதிநிதிகளின் கூட்டம் - நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒற்றுமையாக எதிர்கொளுவது குறித்து ஆலோசனை
- கவிஞர் ரவீந்திராத் தாகூரால் உருவாக்கப்பட்ட மேற்குவங்கத்தில் உள்ள சாந்திநிகேதன் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இணைந்தது
- டிரோன்கள், ஹெலிகாப்டர் உதவியுடன் காஷ்மீரில் 5வது நாளாக தொடரும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை
- மகளிருக்கு மாதம் ரூ.2500, ரூ.500 சமையல் சிலிண்டர், வீட்டுமனையுடன் ரூ.5 லட்சம் நிதியுதவி - தெலங்கானாவில் காங்கிரஸ் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளால் மக்கள் மகிழ்ச்சி
- நீதித்துறையை வலுப்படுத்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தல்
உலகம்:
- ரஷ்யா பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் வடகொரிய அதிபர் - முக்கிய ஒப்பந்தகள் கையெழுத்தானதாக தகவல்
- புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா
- அமெரிக்க அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டால் எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன் - விவேக் ராமசாமி பேச்சு
- வங்கதேசத்தில் அதிர்ச்சி - டெங்கு பாதிப்புக்கு 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- சுற்றுலா மற்றும் கல்விக்கான இங்கிலாந்து விசா கட்டணம் உயர்வு
விளையாட்டு:
- 8வது முறையாக ஆசியக்கோப்பையை வென்று இந்திய அணி சாம்பியன் - இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி அசத்தல்
- ஆட்டநாயகன் விருதுக்கான பரிசுத்தொகையை இலங்கை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய இந்திய வீரர் முகமது சிராஜ் - குவியும் பாராட்டுகள்
- டேவிஸ் கோப்பை டென்னிஸ் - மொராக்கோவை வீழ்த்திய இந்தியா - வெற்ற்யுடன் விடைபெற்றார் போபண்ணா
- 5வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்ரிக்கா அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்
- உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களின் விவரங்களை அறிவித்தது இங்கிலாந்து அணி - கடந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற 8 பேருக்கு மீண்டும் வாய்ப்பு
- உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - தங்கம் வென்றால் இளவேனில் வாலறிவன்