ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி வாரி பிரம்மோற்சவம் அல்லது ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர விழாவாக இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்த விசேஷமாக இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெற உள்ளன. இதற்கு முன் கடந்த 2020 ஆம் ஆண்டு இரண்டு பிறமோற்சவங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள பிரம்மோற்சவத்தின் நிகழ்வுகள் குறித்த அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த பிரமோற்சவம் செப்டம்பர் 18, அதாவது இன்று முதல் துவங்கி செப்டம்பர் 26ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி நடத்தி வருகிறது. பிரம்மோற்சவத்தின்போது தினமும் காலை 8 மணிமுதல் 10 மணிவரையிலும் இரவு 7 மணிமுதல் 9 மணிவரையிலும் முறையே உற்சவங்கள் நடைபெறுகின்றன.
செப்டம்பர் 17: ஞாயிறு - அங்குறார்ப்பணம், விஷ்வகேஸ்ன ஆராதனை
செப்டம்பர் 18: திங்கள் - த்வஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) - மாலை சுமார் 5 மணிக்கு நடைபெறும்
இரவு 9 மணி முதல் 11 மணி வரை - பெத்த சேஷ வாகனம்
19 செப்டம்பர் 2023 - செவ்வாய் - காலை 8 மணி முதல் 10 மணிவரை - சின்ன சேஷ வாகனம்
இரவு 7 மணி முதல் 9 மணி வரை - ஹம்ச வாகனம்
20 செப்டம்பர் 2023 - புதன்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை - சிம்ம வாகனம்
இரவு 7 மணி முதல் 9 மணி வரை - முத்யால பல்லகி வாகனம் (முத்யாபு பாண்டிரி வாகனம்)
21 செப்டம்பர் 2023 - வியாழன் - காலை 8 மணி முதல் 10 மணி வரை - கல்ப வ்ருக்ஷ வாகனம்
மாலை 7 மணி முதல் 9 மணி வரை - சர்வ பூபால வாகனம்
22 செப்டம்பர் 2023 - வெள்ளிக்கிழமை - காலை 8 மணி முதல் 10 மணி வரை - மோகினி அவதாரம்
இரவு சுமார் 7 மணி முதல் 12 மணி வரை - கருட வாகனம்
23 செப்டம்பர் 2023 - சனிக்கிழமை - காலை 8 மணி முதல் 10 மணி வரை - ஹனுமந்த வாகனம்
மாலை சுமார் 4 மணி முதல் 5 மணி வரை - ஸ்வர்ண ரதோத்ஸவம் (தங்க ரதம்)
இரவு 7 மணி முதல் 9 மணி வரை - கஜ வாகனம்
திருப்பதி பிரம்மோற்சவம் (Source: Twitter)
24 செப்டம்பர் 2023 - ஞாயிறு - காலை 8 மணி முதல் 10 மணி வரை - சூர்ய பிரபா வாகனம்
இரவு 7 மணி முதல் 9 மணி வரை - சந்திர பிரபா வாகனம்
25 செப்டம்பர் 2023 - திங்கள் - காலை சுமார் 6 மணிக்கு - ரதோத்ஸவம் ( தேர் திருவிழா)
மாலை 7 மணி முதல் 9 மணி வரை - அஸ்வ வாகனம்
26 செப்டம்பர் 2023 - செவ்வாய் - அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை - பல்லகி உற்சவம் & திருச்சி உற்சவம்
காலை 6 மணி முதல் 9 மணி வரை - சக்ர ஸ்நானம்
மாலை - த்வஜாவரோஹணம்
இதோடு பிரம்மோற்சவம் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.