தமிழ்நாடு:



  • முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா பல்கலை.,யில் முழு உருவச்சிலை திறப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • சேலம் விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி பெயரை சூட்ட வேண்டும் என தொண்டர் சார்பில் மத்திய அமைச்சருக்கு கடிதம் 

  • திருவண்ணாமலையில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல், நிவாரணத்தொகை அறிவிப்பு

  • தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு கடைநிலைப் பணிகளில் 100 சதவிகிதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் - பாமக நிறுவனம் ராமதாஸ் வலியுறுத்தல் 

  • உலக புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா தொடக்கம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு 

  • பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானுக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்ட ரசிகர்கள் - விளையாட்டை வெறுப்பைப் பரப்பும் கருவியாகப் பயன்படுத்தக்கூடாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் 

  • இந்திய - பாகிஸ்தான் போட்டியில் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் உதயநிதிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் 

  • சேலத்தில் நடக்கும் திமுக இளைஞரணி மாநாடு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கான தொடக்கமாக அமையும் - அமைச்சர் மூர்த்தி நம்பிக்கை 


இந்தியா:



  • திருப்பதி கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடக்கம் - பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு 

  • 5 மாநில சட்டமன்ற தேர்தல் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி 

  • பட்டினி குறியீடு ஆய்வில் ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் அளவீடுகள் நமக்கு பொருந்தாது என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தகவல் 

  • தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.490க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் - 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வாக்குறுதி

  • மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

  • ஹெட்மெட் அணியாமல் கையை விட்டு காங்கிரஸ் எம்.பி., ரஞ்சன் சௌத்ரி பைக் பயணம் - இணையத்தில் கடும் எதிர்ப்பு 

  • உலக புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா தொடங்கியது - இசையமைப்பாளர் ஹம்லேகா தொடங்கி வைத்தார் 


உலகம்:



  • போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 330 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ படை தகவல்

  • அமெரிக்காவில் கண்காட்சிக்குள் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - 3 பேர் படுகாயம் 

  • ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் - அச்சத்தில் பொதுமக்கள் 

  • காசா போரின் முதல் வாரத்தில் 10 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தகவல் 

  • 2020 ஆம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு வென்ற அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக் புற்றுநோய் காரணமாக மரணம்


விளையாட்டு:



  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் மோதல் 

  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி 

  • ஷாங்காய் மாஸ்டர் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி தோல்வி 

  • விராட் கோலியிடம் இருந்து ஜெர்ஸியை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வாங்கியதற்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கண்டனம் 

  • பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானுக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்ட ரசிகர்கள் - சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம்