தமிழ்நாடு:
- அதிகாரிகள் அடிக்கடி கள ஆய்வு செய்ய வேண்டும்- முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
- அமைச்சர் நேரு - திருச்சி சிவா எம்.பி., ஆதரவாளர்கள் மோதல் - காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய 5 பேர் கைது
- காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
- திமுகவினர் மோதல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
- ராணிப்பேட்டை, திருவள்ளூர், நாகை, கடலூர், தேனி ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை - 60 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.34 லட்சம் பறிமுதல்
- பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி போராட்டம் - சென்னையில் இன்று அரசு அதிகாரிகளுடன் பால் உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தை
- விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீஸ் - உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் சங்கம் கலைக்கப்படும் என அமைச்சர் நாசர் எச்சரிக்கை
- ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : ஆங்கிலம் தேர்வை 50 ஆயிரம் பேர் எழுதாததால் பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி
- பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தனித்தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
- புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சர் பரவல் எதிரொலி - 1 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை மார்ச் 26 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- வைரஸ் காய்ச்சலால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- நடப்பாண்டு வெப்ப அலையை சமாளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் - மாவட்ட சுகாதாரத்துறைக்கு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
- ஆஸ்கர் விருது வென்ற படத்தில் இடம்பெற்ற முதுமலை தம்பதியினருக்கு ரூ.2 லட்சம் காசோலை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
- ரூ.8 கோடி செலவில் கோயம்புத்தூரில் புதிதாக யானைகள் முகாம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு - யானை பாகன்களுக்கு வீடு கட்ட ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு
- திருவண்ணாமலை ஏடிஎம் தொடர் கொள்ளை - 7வது நபரை கைது செய்த போலீசார்
- பெருமுதலாளிகளுக்கு சாதகமாக வங்கிகள் செயல்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை
இந்தியா:
- ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களால் 3வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்
- அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி 16 கட்சிகள் பேரணி - தடுத்து நிறுத்தப்பட்டதால் அமலாக்கத்துறை இயக்குநருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்
- இந்திய ஏவுகணை மற்றும் ரேடார்களை மேம்படுத்தும் ஒப்பந்தம் அதானி குழுமம் , வெளிநாட்டு நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாக புகார் - இந்திய பாதுகாப்பில் சமரசமா என கேள்வி
- சென்னை - சேலம் 8 வழிச்சாலையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை - பாமக எம்.பி.அன்புமணி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்
- இந்திய அளவில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம் உள்ளது - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
- ஆளுநர் நியமனம் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசிப்பதை வேண்டுமென்றால் ஒரு மரபாக பின்பற்றலாம் - ஓய்வுப்பெற்ற நீதிபதி சர்க்காரியா பரிந்துரை குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
உலகம்:
- இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அதிபர் ஜோ பைடனின் நெருக்கமான எரிக் கார்செட்டி நியமனம்
- தெற்கு துருக்கியில் கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - மக்கள் அவதி
- சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் பலி
- கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
- டெல்லியில் மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி தொடங்கியது
- மகளிர் ஐபிஎல் தொடர்: உத்தரப்பிரதேச அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் வெற்றி
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்