அஸ்ஸாம் அரசாங்கம் மக்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைகளை வழங்க தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்றும், மே மாதத்தில் குறைந்தது 40,000 நியமனங்கள் செய்யப்படும் என்று மாநில நிதியமைச்சர் அஜந்தா நியோக் மார்ச் 14 அன்று தெரிவித்துள்ளார்.


40,000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு


மேலும் 40,000 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முன்னதாகவே மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ள அவர் மீதமுள்ள பணிகளுக்கான வேலைகளும் மேற்கொள்ளப்படும் என்றார். மார்ச் 31, 2022 க்குள் ஒரு லட்சம் வேலைகள் வழங்கப்படும் என்று பாஜகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அகில் கோகோயின் கேள்விக்கு பதிலளித்த நியோக் சட்டமன்றத்தில் இந்த பதில்களை கூறினார்.



1 லட்சம் பணியிடங்களை நிரப்பும் பணி துவக்கம்


"ஒரு லட்சம் பணியிடங்களை நியமிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆட்சேர்ப்பு செயல்முறை முடிந்ததும், படிப்படியாக நியமனங்கள் வழங்கப்படும்," என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், அரசாங்கம் வெவ்வேறு மன்றங்களில் தவறான ஆட்சேர்ப்பு புள்ளிவிவரங்களை வழங்குவதாகவும், வெவ்வேறு பதவிகளுக்கு ஒரே ஆட்களை தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கோகோய் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: Russia Jet - US drone Clash: பெரும் பதற்றம்.. அமெரிக்க ட்ரோன் மீது மோதிய ரஷ்ய ஜெட் விமானம்..! நடந்தது என்ன..?


தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை


தேர்தல் வாக்குறுதியாக 1 லட்சம் வேலைகள் குறித்து பாஜக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், வருடங்கள் ஆகியும் நிறைவேற்றாதது குறித்து பலர் கேள்வி எழுப்பினர். "ஒரு வருடத்தில் ஒரு லட்சம் அரசு வேலைகளை வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் அதைச் செய்ய முடியவில்லை" என்று ரைஜோர் தளத் தலைவர் மேலும் கூறினார். மறுபுறம், CPI(M) சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்ச் தாலுக்தாரும் அமைச்சரின் பதிலில் அதிருப்தியை வெளிப்படுத்தினார், மேலும் பாஜக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பிடித்தது, ஆனால் "வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது" என்று சுட்டிக்காட்டினார்.



ஒன்றரை ஆண்டு சாதனை


கடந்த ஒன்றரை ஆண்டுகளில், அஸ்ஸாம் மாநில அரசால் 40,000க்கும் மேற்பட்ட வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க முடிந்தது. முன்னதாக பிப்ரவரி 22 அன்று, பஞ்சாபரி, ஸ்ரீமந்தா சங்கர்தேவ் கலாகேத்ராவில் மீன்வளம் மற்றும் கால்நடைத் துறையின் நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அசாம் முதல்வர், வேலையில்லாத இளைஞர்களுக்கு 1 லட்சம் வேலை வாக்குறுதியை நிறைவேற்ற மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய கேபினட் அமைச்சர் ஜெயந்த மல்லபருவா, "அஸ்ஸாமில் பொறியியல் டிப்ளமோ படிப்பின் கீழ் உள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு உயர்நிலைப் பள்ளிக்கு இணையாக அஸ்ஸாமின் மாநில தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் வழங்கப்படுகிறது" என்றார்.