தமிழ்நாடு:



  • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களாட்சி முறை, நாடாளுமன்றம் இருக்குமா? - சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

  • நடைமுறைக்கு வராத மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து மோடி அரசு பெருமை பேசுகிறது - மகளிர் உரிமை மாநாட்டில் திமுக எம்.பி கனிமொழி பேச்சு

  • அனைத்து குடும்பதலைவிகளுக்கும்  உரிமைத்தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வரும் 18ம் தேதி முதல்  பாஜக ஆர்பாட்டம் - அண்ணாமலை

  • அனைத்து பள்ளிகளிலும் ”குழந்தை திருமணம்  இல்லா தமிழ்நாடு” என்ற  பெயரில் உறுதிமொழி ஏற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

  • குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோயில் தசரா விழா இன்று தொடங்குகிறது -  காளி பூஜையில் திரளான பக்தர்கள்  பங்கேற்பு

  • மகாளய அமாவசை - முன்னோர்களுக்கு திதி கொடுக்க கோயில்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் குவிந்த மக்கள்

  • சென்னையில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்த மழை - அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என எச்சரிக்கை


இந்தியா:



  • 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் - பிரதமர் மோடி பேச்சு

  • சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 4ம் தேதி தேசிய விண்வெளி தினமாக அறிவிக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

  • I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்து மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும்  - மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேச்சு

  • இஸ்ரேலில் இருந்து 197 பயணிகளுடன்  டெல்லி வந்தது மூன்றாவது விமானம் - மீதமுள்ள இந்தியர்களையும் தாயகம் அழைத்து வர மத்திய அரசு தீவிரம்

  •  இந்தியாவில் வாழ விரும்பினால்  பாரத் மாதா கி ஜே சொல்ல வேண்டும் - மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி பேச்சு

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் - கூட்டநெரிசலை தவிர்க்க சிறப்பு தரிசனங்கள் ரத்து

  • கருணாநிதி பிறந்தநாள்  நூற்றாண்டு விழா நினைவு நாணாயம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு  ஒப்புதல்


உலகம்:



  • காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு தயார் - ஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு 

  • பிரான்ஸில் பாதுகாப்பு அச்சுறுத்தல் -  நாடு முழுவதும்  7 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு

  • அல்கொய்தாவை விட மோசமானது ஹமாஸ் அமைப்பு -  அமெரிக்க அதிபர் பைடன்

  • நியூசிலாந்து  பொதுத்தேர்தலில் ஆளும்கட்சி தோல்வி - எதிர்க்கட்சி தலைவர் புதிய பிரதமராகிறார்

  • ரஷ்யாவிற்கு வடகொரியா  ஆயுத விநியோகம் -  புகைப்பட ஆவணுங்களுடன் அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு


விளையாட்டு:



  • உலகக் கோப்பையில் இன்றைய லீக் போட்டிய்ல் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை எதிர்த்து களமிறங்குகிறது ஆப்கானிஸ்தான் - டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது

  • பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி - பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக வெற்றி

  • கைவிரலில் எலும்பு முறிவு - நியூசிலாந்து அணியின் அடுத்த மூன்று போட்டிகளிலும் கேப்டன் வில்லியம்சன் பங்கேற்கமாட்டார் என தகவல்

  • காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து விலகுவதாக இலங்கை கேபடன் தசுன் ஷனகா அறிவிப்பு