தமிழ்நாடு:  



  • மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள். 

  • தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை. 

  • சென்னை பெரம்பூர் நகைக் கடை கொள்ளையர்களை நெருங்கிவிட்டதாக காவல் ஆணையர் பேட்டி. 

  •  பிபிசி ஆவணப்படம், அதானி விவகாரம் குறித்து பிரதமர் முறையாக பதில் அளிக்காமல் வார்த்தை ஜாலம் காட்டுகிறார் - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் 

  • கடந்த ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் -  டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு  

  • போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டு தீ; 50 ஏக்கர் பரப்பளவுக்கு மரங்கள் செடிகள் எறிந்து நாசம். 

  • இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கிறது -  காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி 

  • இடைத்தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதி செய்க - தேர்தல் ஆணையருக்கு அண்ணாமலை கடிதம்

  • மதுரையில் அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்; பாட்டில்கள் கேன்களில் பெட்ரோல் வழங்கினால் நடவடிக்கை; காவல் துறை எச்சரிக்கை. 

  • கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர மீனவர்கள் கோரிக்கை; தூண்டில் வலைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராடப்போவதாகவும் அறிவிப்பு

  • கோவை சூலூரில் கல்லூரி மாணவர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல்; பிரச்சனை ஏதும் இல்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் விளக்கம்


இந்தியா:



  • பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களையும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து 220 விமானங்களையும் ஏர் இந்தியா வாங்க ஒப்பந்தம்.

  • நாக்பூரில் இருந்து மும்பை சென்ற சரக்கு ரயில் 90 கண்டெய்ணர்களுடன் மாயம்; ரயிலை கண்டு பிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல். 

  • டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை; அண்மையில் குஜராத் கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் வெளியிட்டுருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • அதானி விஷயத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை அமித் ஷா பேட்டி; 2024ல் பாஜகவுக்கு போட்டி இருக்காது எனவும் நம்பிக்கை. 


 


உலகம்:



  • அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் விமானம் வாங்க ஒப்பந்தம் என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு. 

  • 20235ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை; ஐரோப்பாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் 

  • பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான்; அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வு. 


விளையாட்டு:




  • ஆசிய உள்ளரங்க தடகள போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு 




  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மகளிர் பிரீமியர் லீக் 2023க்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.



  • இந்தியா மற்றும் நேபால் இடையேயான மகளிர் கால்பந்து போட்டி இன்று சென்னையில் துவக்கம்.