Tirumala Tirupati : திருப்பதியில் பிப்ரவரி மாதத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தரிசிக்க இன்று முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.


உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி திருமலை திருப்பதி கோயிலில் தரிசனம் செய்ய விரும்பும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆன்லைன் டிக்கெடுகள் இன்று காலை 9 மணிக்கு https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






பக்தர்கள் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை என இரண்டு முறை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும பகல் 3 மணிக்கு மட்டும் தரிசனம் செய்ய முதியோர்களுக்கு ஒதுக்கப்படும். இதனை அடுத்து, https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.


அதேசமயம் பாலாலயம் தொடர்பான பணிகள் காரணமாக பிப்ரவரி 22 முதல் 28ம் தேதி வரையில் சிறப்பு தரிசனத்திற்கான அனுமதி இருக்காது எனவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  


பாலாலயம் என்றால் என்ன?


2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் தங்க கோபுரத்திற்கு பொன் மூலம் பூசப்பட்ட புதிய தகடுகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி சுமார் ஆறு மாதகாலம் நடைபெறும் என கூறப்படுகிறது.  இந்த சமயத்தில் பாலாலயம் செய்யப்படும்போது வேறு ஒரு மூலவரை ஏற்பாடு செய்யும் பணிகள் நடைபெறும்.


அதேசமயம்  திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தற்போது இருக்கும் மூலவரையும் வழிபடலாம். மூலவருக்கு நடைபெறும் கட்டண சேவைகள் வழக்கமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் 1957- 58 ஆம் ஆண்டில் புதிய தங்க தகடுகள் பொருத்தப்பட்டபோதும், 2018-ஆம் ஆண்டு பாலாலயம் நடைபெற்ற போதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Chennai Traffic: வாகன ஓட்டிகளே..! சென்னையில் 2 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் நீட்டிப்பு - இனி எப்படி போகனும்?


Spiritual Tour: சூரியன் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்யும் கோயில் பற்றி தெரியுங்களா..?