தமிழ்நாடு:



  • இன்றைய நிலவரம்: பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24 என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • மணல் குவாரி அதிபர்களின் வீடுகள் உள்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், வேலூரில் தீவிர சோதனை

  • நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • அண்ணாமலை ஊர்வலம், ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி குளறுபடி 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு

  • தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்கவேண்டும்: காவிரி ஒழுங்காற்று வாரியம் பரிந்துரை

  • சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

  • நடிகர் விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

  • திமுகவினர் ஆடும் கபட நாடகம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது - அண்ணாமலை அறிக்கை

  • சென்னையில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’ 12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை - அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவு

  • நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் சம்மன்: சீமான் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 221 பேர் மீது வழக்கு


இந்தியா:



  • கோழிக்கோட்டில் மீண்டும் பரவியது கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலி: விரைந்த மத்திய சுகாதாரக் குழு

  • நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவர் மீண்டும் செயல்பட வாய்ப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை

  • இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது.

  • 12 நாள் சுற்றுப்பயணம்: ஸ்பெயின் புறப்பட்டார் மம்தா பானர்ஜி.

  • நாடாளுமன்ற ஊழியர்களின் புதிய சீருடையில் ‘தாமரை’ படம் - காங்கிரஸ் எதிர்ப்பு.

  • தேச துரோக சட்டத்துக்கு எதிரான மனுக்கள்; அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் - உச்சநீதிமன்றம் உத்தரவு.

  • காவிரி விவகாரம் குறித்து இன்று கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

  • பெங்களூருவில் சட்டவிரோத லே-அவுட்டுகள் அமைவதை தடுக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு


உலகம்:



  • ஜி-20 மாநாடு மிகப்பெரிய வெற்றி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு.

  • சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் நாளை பதவியேற்கிறார்.

  • இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அகாடமி விருதுக்கு 2 இந்திய எழுத்தாளர்கள் தேர்வு.

  • ரெயிலில் பயணம்: வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ரஷியா சென்றார்.

  • இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் ரஷியாவுக்கே பலன் தரும்: அதிபர் புதின் பேச்சு

  • இங்கிலாந்து பெரியவர்களுக்கான கொரோனா தடுப்பூசியும், வருடாந்திர ப்ளூ தொற்றிற்கான தடுப்பூசியும் ஒரே சமயத்தில் செலுத்த தொடங்கி விட்டதாக தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


விளையாட்டு: 



  • ஆசியக்கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • ஆகஸ்டு மாதத்திற்க்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.