நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணவு என்பதே ஒருவகை உணர்வுதான். நண்பர்களுடன் சாப்பிடுவது அல்லது தனியாக நமக்கு நாமே ட்ரீட் வைத்துக் கொள்வது ஒவ்வொரு வகையான உணவும் ஒருவகை வெளிப்பாடு. பிரியாணி என நினைத்தாலே நம்மில் பலருக்கு நாவில் எச்சில் ஊறும்.


நல்ல டேஸ்டியான பிரியாணியை ஆவி பறக்கச் சூடாகச் சாப்பிட யாருக்குதான் பிடிக்காது. நம்மில் பெரும்பாலானோருக்கு பிரியாணி என்பது அவர்களது வாழ்க்கையில் ஒரு அங்கம். பிரியாணி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாகத் தயாரிக்கப்படுகிறது. ஐதராபாத, சென்னை, திண்டுக்கல், கொல்கத்தா, லக்னோ என ஒவ்வொரு பிரியாணிக்கும் ஒருவகை சுவை உண்டு, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகத் தயாரிக்கப்படுகிறது.






அண்மையில் ட்விட்டரில் தனது பிரியாணி அனுபவத்தைப் பகிர்ந்த ஒரு நபர், கொல்கத்தா மற்றும் லக்னோவில் கிடைக்கும் உணவு வகைகளை விட, சென்னையின் திண்டுக்கல் பிரியாணியை தான் சிறப்பானதாக இருப்பதாக அவர் கூறினார். இதுகுறித்து அறியாதவர்களுக்கு, கொல்கத்தாவில் பிரியாணி பெரும்பாலும் முட்டை மற்றும் உருளைக்கிழங்கு அதிகமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.


அதேசமயம், லக்னோவில் பிரியாணியில் தம்-புக்த் எனப்படும் பாணி சமையல் முறைப் பின்பற்றப்படுகிறது, அதில் இறைச்சியைத் தனியாகச் சமைத்துப் பயன்படுத்துவார்கள். இதை அடுத்து பிரியாணி பிரியர்களிடமிருந்து கலவையான எதிர்வினை உருவாகியது. 


திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி


அந்த இடுகையில் விரிவான தலைப்புடன் பிரியாணி படம் இடம்பெற்றிருந்தது. அதில், “பிரபலமான பிரியாணிகளில் சென்னையின் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. ஐதராபாத் பிரியாணி என்னுடைய ஆல்டைம் ஃபேவரிட் என்றாலும் திண்டுக்கல் பிரியாணி மிகவும் சிறப்பானதாகவும் என்னளவில் லக்னோ மற்றும் கொல்கத்தா பிரியாணியை விட தேர்ந்ததாகவும் இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார், மேலும், இதுதனது கருத்து மட்டுமே என்றும் யாரும் வாதத்துக்கு வரவேண்டாம் என அவர் கூறியும் இதுவரை 78 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், பலர் அதில் தனது கருத்துகளை பிரியாணி அளவுக்கு காரசாரமாகப் பதிவு செய்து வருகின்றனர்... 










சிலர் “ பாஸ்மதியைத் தவிர வேறு எந்த அரிசி வகையிலும் செய்யப்பட்ட உணவையும் பிரியாணி என்று அழைக்க வேண்டாம். இது ஒரு பணிவான வேண்டுகோள்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். .