Marriage : கூடுதல் வரதட்சணை தராததால் திருமணத்தை மணப்பெண் நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலம் ஐதரபாத் அடுத்த போச்சாரம் பகுதியைச் சேர்ந்தவர் மணப்பெண். இவருக்கு அதே பகுதியில் வசித்து வந்த இளைஞருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்படி, இருவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெறவிருந்தது. அதன்படி, மணமகன் வீட்டார் பத்ர்த்திரி குடேம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண ஏற்பாடுகளை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டு இருந்தனர்.


இந்நிலையில், பழங்குடியினத்தை சேர்ந்தவர் மணப்பெண் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களின் வழக்கப்படியே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இதனால் பழங்குடியின வழக்கப்படி தங்கள் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு மணமகன் வீட்டார் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பது வழக்கம். அதன்படி, மணமகளுக்கு மணமகன் வீட்டார் 2 லட்ச ரூபாயை வரதட்சணையாக வழங்கினர்.


இதனை அடுத்து, நேற்று முன்தினம் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமண மண்டபத்திற்கு வந்தனர். இதற்கிடையில் மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மண்டபத்திற்கு வராமல், அருகில் இருக்கு ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தனர். திருமண மண்டபத்தில் ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது. மணமகன் திருமண உடையில் மணமேடையில் வந்தார். ஆனால் மணப்பெண்ணும் அவரது வீட்டார்களும் மண்டபத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே மணப்பெண் வீட்டாருக்கு தொடர்பு கொண்டு பேசினர். 


பின்னர், மணப்பெண் இருக்கும் ஹோட்டலுக்கு சென்று விசாரித்தனர். அப்போது மண்டபத்திற்கு வராததாகவும், வரதட்சணை கூடுதலாக கொடுத்தால் மட்டுமே மண்டபத்திற்கு வர முடியும் என்று கூறினர்.  மணமகன் வீட்டார் மணமகளிடம் கெஞ்சியும் அவர் மனம் இறங்கவில்லை. இதனை அடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், திருமணம் நின்றது.


பின்னர், மணமகளுக்கு வரதட்சணையாக  கொடுத்த  ரூ.2 லட்சத்தை மணமகன் வீட்டார் பெற்றுக் கொண்டனர். வரதட்சணை கூடுதலாக அளிக்காததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


National Animal: இந்தியாவின் தேசிய விலங்காக பசுவை அறிவிப்பாங்கன்னு நம்புறோம்.. நீதிமன்றம் தெரிவித்தது என்ன?