தமிழ்நாடு:
- திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- கி. வீரமணி 90வது பிறந்தநாள்: முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து
- வருங்காலத்தை வழிநடத்த உள்ள உதயநிதி ஸ்டாலின் - கிரிக்கெட் விழாவில் அமைச்சர் மூர்த்தி பேச்சு
- தமிழகத்தில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி இந்த ஆண்டு வருமான வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 83 சதவீதம் தற்போது வசூலிக்கப்பட்டிருக்கிறது.
- பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
- புதிய பாம்பன் பாலத்தின் 84% கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக மித்திய ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- திமுக அரசைக் கண்டித்து கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
- டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதனிலைத் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாக, முதன்மைத் தேர்வுக்கு 1:50 விகிதத்தில் அனுமதிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
- புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் காரணத்தால் நாளை கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா:
- குஜராத்தில் 2-ஆம் கட்ட தேர்தல்: அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம்
- மங்களூரு: ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த வழக்கு விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றம்
- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 275- பேருக்கு கொரோனா
- கச்சா எண்ணெய் விலை சரிவு; பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை; மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்
- திரிபுராவில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
உலகம்:
- மனித மூளைக்குள் சிப்; விரைவில் பரிசோதனை - எலான் மஸ்க் அறிவிப்பு
- ஜி 20 தலைமை இந்தியாவுக்கு வந்திருப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது: ஐநாவில் இந்திய தூதர் பெருமிதம்
- இந்தியாவின் ராணுவப் பயிற்சியில் தலையிட மூன்றாம் தரப்பினருக்கு அதிகாரம் இல்லை - சீனாவுக்கு இந்தியா பதில்
- இருமல் மருந்தால் நிறைய குழந்தைகள் உள்பட 199 பேர் உயிரிழந்த நிலையில் இந்தோனேசியாவில் மக்கள் இழப்பீடு கேட்டு வருகின்றனர்.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடனைக் கொன்றுவிட்டு வெள்ளை மாளிகையைத் தகர்க்கப் போவதாக மிரட்டியதற்காக ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒருவருக்கு 33 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஜார்ஜியாவின் மத்திய மாவட்டம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விளையாட்டு:
- மகளிர் கிரிக்கெட் தொடர் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய மகளிர் அணி அறிவிப்பு
- ஐபிஎல் மினி ஏலத்தின் அடிப்படை விலை 2 கோடியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை.
- இந்தியாவில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் அடுத்த இந்திய அணி ஆடவர் தேர்வுக்குழு தலைவராக தேர்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.