வெளிநாட்டு பணம் தொடர்பாக விளக்கம் தராததால் திருப்பதி கோயிலுக்கு ரூ. 3.29 கோடி அபராதத்தை இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்திய மக்கள் மட்டுமன்றி, வெளிநாட்டினர் பலரும், திருப்பதி கோயிலுக்கு வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர்.
திருப்பதி தேவஸ்தானம் சரியான நேரத்தில் எஃப்.சி.ஆர்.ஏ பதிவை புதுப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டு பணம் தொடர்பாக, கடந்த 3 ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பக்தர்கள் செலுத்திய வெளிநாட்டு பணம் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுமார் ரூ. 3.29 கோடி அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்.
அதில் தெரிவித்துள்ளதாவது, தினமும் லட்சக்கணக்கான இந்திய பகதர்கள் வருகை தரும் மிகவும் புனிதமான திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (டி.டி.டி) ரூ .3 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
Also Read: காலகஸ்திநாதபுரம் ஸ்ரீ காலபைரவர் கோயில் கும்பாபிஷேகம் விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Also Read: இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா - வேளாங்கண்ணியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்