திருப்பதி கோயில்:


உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 


வைகுண்ட ஏகாதசி:


மார்கழி  மாதத்தில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்கு அடுத்தப்படியாக வைகுண்ட ஏகாதசி திருவிழா  கோலகலமாக நடைபெற உள்ளது.  டிசம்பர் மாதம் 23ஆம் தேதி 2024 ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெகு விமர்சையாக வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படும்.  


இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. டிசம்பர் 23ஆம் தேதி முதல் திறக்கப்படும் சொர்க்கவாசல் ஜனவரி 1 வரை திறந்திருக்கும்.  இதற்கான சொர்க்க வாசல் தரிசன ஏற்பாட்டையும் தேவஸ்தானம்  செய்து வருகிறது. 


4.23 லட்சம் இலவச தரிசன டிக்கெட்


நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசன மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தினமும் 25,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கான 2 லட்சத்து 25 ஆயிரம்  டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.


அதேபோல, சாதாரண பக்தர்களும் வைகுண்ட வாசல் வழியாக சாமியை தரிசனம் செய்ய ஏதுவாக, டிசம்பர் 22ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இலவச தரிசன டிக்கெட் வழங்குவதற்காக திருப்பதியில 9 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆதாரை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


67,198 பக்தர்கள் தரிசனம்:


திருப்பதி ஏழுமலையானை நேற்று 67,198 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 22,452 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ள நிலையில், ரூ.4.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.  சுமார் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Israel-Hamas war: 50 பிணைக்கைதிகள் விரைவில் விடுவிப்பு.. 4 நாட்கள் தற்காலிக இஸ்ரேல்- ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்..!