தமிழ்நாடு:



  • தமிழ்நாடு காவல்துறை நுண்ணறிவு பிரிவில் தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பு; ரூ.60 கோடி ஒதுக்கீடு

  • அனைத்து பல்கலைக்கழகங்களும் சிறப்பாக வளர மாநில முதலமைச்சர்களே வேந்தராக இருக்க வேண்டும் - பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • சென்னையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

  • வங்கக்கடலில் காற்று சுழற்சி நீடிப்பதால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

  • நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு - மன்சூர் அலிகான் மீது 2 பிரிவில் வழக்குப்பதிவு

  • நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்க்கட்சியாக இருக்கும் போது போராடினோம். தற்போது வரை உண்மையாக போராடி வருகின்றோம்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

  • இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

  • காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

  • சென்னையில் வருகின்ற நவம்பர் 26ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

  • நாளை (வருகின்ற 23ம் தேதி) காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


இந்தியா: 



  • 2024ஆம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை செல்ல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விமான போக்குவரத்து அமைச்சகம் விமானத்தில் இருமுடியுடன் பயணிக்க அனுமதி அளித்துள்ளது.

  • கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட தனது தொப்பியை ஆசிரியர்கள் திருப்பித் தருமாறு கோரி முன்னாள் மாணவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

  • பாங்காக்கிலிருந்து இந்தியாவுக்கு கடத்திக்கொண்டு வரப்பட்ட 4 கிலோ தங்க கட்டிகளை டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  • நாட்டின் நலனுக்காக ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் - ராம்நாத் வேண்டுகோள்

  • இளைஞர்களின் திடீர் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை - ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தகவல்

  • மத்திய பிரதேச மாநிலத்தில் கிஷுபுரா தொகுதியில் இருக்கு வாக்குச்சாவடி ஒன்றில் நேற்று காலை முதல் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.


உலகம்: 



  • ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டாம். மக்கள் இறந்தால் இறக்கட்டும். அரசு அதை அனுமதிக்க வேண்டும்" என்று கொரோனா பரவிய காலத்தில் ரிஷி சுனக் பேசியதாக ஒரு செய்தி பரவி வருகிறது. 

  • இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டதாக ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளார்.

  • ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஜாம்பவான்களான சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைய உள்ளனர்.


விளையாட்டு: 



  • பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கத்தார் அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது இந்திய கால்பந்து அணி

  • உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் 26வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் பங்கஜ் அத்வானி

  • ஐசிசி 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியானது இலங்கையில் இருந்து  தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

  • பாகிஸ்தான் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பை உமர் குல் மற்றும் சயீத் அஜ்மல் ஆகியோரிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்படைத்துள்ளது.