Tirupati :  திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டயாம் முகக்கவசம் அணி வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


அதிகரிக்கும் கொரோனா 


2020ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா கடந்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் தற்போது  சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் வீரியமெடுக்கும் கொரோனா, மீண்டும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.  சீனாவில் உருமாறிய பிஎஃப் 7 கொரோனா தொற்று முழு வீரியத்துடன் தற்போது பரவி வருகிறது. முன்னதாக இந்தியாவில் குஜராத், ஒடிசா மாநிலங்களிலும் இந்த உருமாறிய பிஎஃப் 7 கொரோனா தொற்று பரவியது. இதனால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்


இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம். ஏழுமலையான் கோவிலில் தினசரியும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இலவச தரிசனம் மட்டுமல்லாது சிறப்பு தரிசனம் கட்டண தரிசனங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர்.


அதனால், கெரோனா தொற்று தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் சானிடைசர் கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


4.50 லட்ச டோக்கன் வழங்க ஏற்பாடு


வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு திருமலையில் பக்தர்களின் வசதிக்காக 9 பகுதிகளில் சுமார் 92 கவுன்ட்டர்கள் மூலம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.  ஜனவரி 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரையிலான 10 நாட்களுக்கு, ஜனவரி 1-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் இலவச டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்படும். 10 நாள் முடியும் வரை 4.50 லட்ச டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பக்தர்களின் விரைவான தரிசனத்துக்காக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடுகளை கண்காணித்து, டோக்கன் எடுத்த பிறகே பக்தர்கள் திருமலைக்கு வர வேண்டும் என அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார். மேலும், வைகுண்ட ஏகாதசியையொட்டி  அதிகாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். பக்தர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் 3.5 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்படும். 2 மலைப்பாதை சாலைகளும் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படும் என தெரிவித்தார்.




மேலும் படிக்க


Covid19: கொரோனா பரவல் அச்சநிலை.. மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை