கன்னட திரை உலகின் பவர் ஸ்டார் என போற்றப்படும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட புனித் ராஜ்குமார் இன்று மாரடைப்பால் உயிரிழந்த செய்தி இந்திய திரையுலகத்தையே சோகத்தில் மூழ்க வைத்துள்ளது. கட்டுக்கோப்பான உடலை கொண்ட 46 வயதேயான புனீத் ராஜ்குமாரின் மரணத்தை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என சினிமா, அரசியல் பிரபலங்கள் கருத்திட்டு வருகின்றனர்.


தனது தந்தை ராஜ்குமாரை, சகோதரர் சிவராஜ் குமாரை போலவே புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வந்த புனித் ராஜ்குமாரின் கருத்துக்கள், வசனங்கள் நம்பிக்கையூட்டும் வகையிலும் வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் வகையிலும் இருக்கும். புனித் ராஜ்குமாரின் மறைவை தொடர்ந்து அவரது கருத்துக்கள், வசனங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


புனித் ராஜ்குமாரின் கருத்துக்கள் சில..



  • தோல்வி என்பது வெற்றியின் எதிர் நிலையில் இருக்கும் ஒன்றல்ல. அது வெற்றியின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.

  • இலக்குகளை நோக்கி ஓடும் வயதில் பெண்களை நோக்கி ஓடுவதை நிறுத்திவிடுங்கள்

  • வாழ்க்கை என்பது சமநிலையானது; வலிமையாக இருக்கும்போது கனிவாக இருங்கள்; பலவீனத்துடன் இருக்கும்போது பலமாக இருங்கள்.

  • எதிர்காலத்தில் RUNNER UP ஆக மட்டுமே இருந்துவிடக்கூடாது

  • தவறான உறவுடன் இருப்பவரை விட; தனியாக இருப்பவர் பலமானவராக இருக்கிறார்

  • அறிவு உங்களை பதவியை கொடுக்கும். ஆனால், உங்கள் குணம் மட்டுமே மரியாதையை தரும்

  • நேர்மை என்பது மிகவும் விலை உயர்ந்த அன்பளிப்பு; அதை தரம் தாழ்ந்த மனிதர்களிடம் எதிர்பார்க்காதீர்கள்

  • சரியான நேரத்திற்காக காத்திருக்காதீர்கள்; காலம் உங்களுக்காக ஒருபோதும் காத்திருக்காது

  • ஒவ்வொரு நாளும் நீங்கள் முன்னேற்றமடைய உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்

  • மற்றவர்களுக்கு நீங்கள் அளிக்கும் விலை உயர்ந்த அன்பளிப்பு நேரம். ஏனெனில், நீங்கள் உங்கள் நேரத்தை பிறருக்கு ஒதுக்குவது என்பது உங்கள் வாழ்வின் ஒரு பகுதியை அவருக்கு கொடுப்பதாகும். அதை உங்களால் மீண்டும் பெற முடியாது

  • வாழ்க்கை என்பது உங்களை நீங்களே கண்டறிவது அல்ல. வாழ்க்கை என்பது உங்களை நீங்களே உருவாக்குவது.

  • நீங்கள் என்னை எப்படி நடத்துகிறீர்களோ அது போல் எனது நான் நடந்துகொள்வேன்.

  • எந்த வகையில் ரிஸ்க் எடுத்தாலும் அது உங்கள் கனவுகளை நனவாக்க உதவும்

  • உங்களை வெறுப்பவர்கள் உங்கள் வெற்றியை காண்பதற்கு நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என விரும்புங்கள்

  • குறைந்த அளவிலான தேவைகளையும், அதிக அளவிலான அனுசரிப்புகளையும் வைத்திருந்தால் வாழ்க்கை வெற்றிகரமானதாக இருக்கும்.