ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆழ்துளை கிணற்றை தோண்டுவதற்கு என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை.


ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை:


அதன் தொடர்ச்சியாக, பிகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள குல் கிராமத்தில் 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை தொடர் நடவடிக்கையை எடுத்து வருகிறது.


இதையும் படிக்க: Longest Serving CMs: நவீன் பட்நாயக் முதல் கருணாநிதி வரை..நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்தவர்கள் யார்? யார்?


ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் பெயர் சிவம் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவலின்படி, விவசாயி ஒருவர்தான் ஆழ்துளை கிணற்றை அமைத்துள்ளார். ஆனால், அது மூடப்படாததால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 


சிவத்துடன் விளையாடிய மற்ற குழந்தைகள் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்ததையடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பெற்றோர் உள்பட கிராம மக்கள் விரைந்துள்ளனர். இதையடுத்து, மீட்பு பணி தொடங்கியது. மீட்பு பணிக்கு நாலந்தா நகர் பஞ்சாயத்து துணை தலைவர் நளின் மவுரியா உதவி வருகிறார்.


மீட்கும் பணி தீவிரம்:


இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், "இந்த ஆழ்துளை கிணறு, விவசாயிகளால் துளையிடுவதற்காக அமைக்கப்பட்டது. ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் வேறு இடத்தில் துளையிட ஆரம்பித்தனர். இருந்தபோதிலும், இந்த ஆழ்துளை கிணறு மூடப்படவில்லை" என்றார்.


முன்னதாக, இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஷம்பு மண்டல், "குழந்தை இன்னும் உயிருடன் இருக்கிறது. அவர்களால் அவரது குரலைக் கேட்க முடிகிறது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. குழந்தையை மீட்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம்" என்றார்.


உள்ளே சிக்கியுள்ள குழந்தைக்கு ஆக்ஸிஜனை வழங்கவும், துளையிலிருந்து குழந்தையை மீட்கவும் ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து பேசியுள்ள காவல் நிலைய பொறுப்பாளர் தினேஷ்குமார் சிங், "குழந்தையை பத்திரமாக வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


சம்பவம் குறித்து மூத்த அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பர்சோட்டம் அதிகாரிகள் பலர் சம்பவ இடத்துக்கு வந்தனர்" என்றார்.


இதையும் படிக்க: Manipur Tension: உச்சகட்ட பதற்றம்? மற்ற மாநிலங்களுக்கும் பரவும் இனக்கலவரம்..மிசோரத்தில் இருந்து வெளியேறும் மெய்தி சமூகத்தினர்