ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்த ஒருவரை மும்பை போலீசார் இன்று கைது செய்தனர். இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 






இன்று காலை மும்பை கிர்கானில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் லேண்ட்லைன் எண்ணுக்கு அப்சல் என்ற நபர் அழைத்து முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மூன்று முதல் நான்கு தடவை வரை போன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.






மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை போலீசார் அடையாளம் கண்டதை அடுத்து சந்தேக நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.


முதற்கட்ட விசாரணையில் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரியவந்துள்ளது. தற்போது வழக்கு பதிவு செய்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண