தென்மண்டல முதலமைச்சர் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தென் மண்டல கவுன்சிலில் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார்.
பங்கேற்கும் முதலமைச்சர்கள் பட்டியல் :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மேலும், இந்த தென் மண்டல மாநாட்டில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த மூத்த அமைச்சர்கள், தலைமைச்செயலாளர்களும், முதன்மை செயளாளர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
கூட்டத்திற்கான காரணம் :
நதிநீர் பகிர்வு, கடலோர பாதுகாப்பு, இணைப்பை ஏற்படுத்துதல், எரிசக்தி, பாதுகாப்பு, சாலை, போக்குவரத்து, தொழில், நீர், காடு, சுற்றுச்சுழல், வீட்டு வசதி, கல்வின் உணவு போன்றவை குறித்து முடிவெடுக்கப்பட இருக்கிறது.
மேலும், ஏற்கனவெ நிறுவப்பட்ட நடைமுரை மற்றும் வழக்கின்படி, மண்டல கவுன்சில் கூட்டத்தில் அதன் நிலைக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், முதலமைச்சர்கள் கூட்டத்தில் முன் வைக்கப்படும் நிகழ்ச்சி நிரல்க் ஆராயப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.
அமித்ஷா வருகை :
இன்று கேரள மாநிலத் தலைநகரில் நடைபெறவுள்ள தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 30-வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (நேற்று) வெள்ளிக்கிழமை மாலை சென்றடைந்தார்.