கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்காக ஒரு மரம் வெட்டப்பட்டு அகற்றப்பட்ட பின்னர், ஏராளமான பறவைகள் கொல்லப்பட்டு அவற்றின் முட்டைகள் மற்றும் கூடுகள் அழிக்கப்பட்ட சோகமான சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்காக ஒரு மரம் வெட்டப்பட்டது. அப்போது அம்மரத்தின் ஏராளமான பறவைகள் பறந்து சென்றன. ஆனால் அதில் சில பறவைகள் மாட்டிக் கொண்டு உயிரிழந்தன. மேலும் அவற்றின் முட்டைகள் மற்றும் கூடுகள் அழிக்கப்பட்டன. இநிகழ்வானது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் பயனாளர் ஒருவர், அனைத்து மக்களும் வீட்டை விரும்புகிறார்கள், ஆனால் சக வாழ்விடங்களின் வீடுகளை முற்றிலுமாக அழிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read: KGF Killer: கே.ஜி.எப். ஹீரோ போல ஆக வேண்டும்! 5 கொலை செய்த 19 வயது இளைஞர் - ஷாக் வீடியோ