நாட்டின் உயர் நீதிமன்றங்களில் தகுதிப்படைத்த பெண்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என பெண்கள் வழக்கறிஞர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணையின் போது எஸ். ஏ போப்டே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்," ஏன் உயர் நீதிமன்றங்களை மட்டும் பேச வேண்டும்? உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். பெண்களிள் பிரதிநிதித்துவத்துக்கு நீதிபதிகள் தேர்வுக் குழு முக்கியத்துவம் கொடுக்கும்" என்று தெரிவித் அவர்,
1989-ம் ஆண்டு, நீதிபதி பாத்திமா பீவி உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டதில் இருந்து, இதுவரை வெறும் எட்டு பெண் நீதிபதிகள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றியுள்ளனர். தற்போது, மொத்தமுள்ள 33 நீதிபதிகளில், இரண்டு பெண் நீதிபதிகளும் இதில் அடங்குவர். நாட்டின் 25 உயர் நீதிமன்றங்களில், 78 பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். உயர் நீதித்துறையில் பெண் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் மிக அதிகமாக 13 பெண் நீதிபதிகளைப் பெற்றுள்ளது . தற்போதுள்ள 63 நீதிபதிகளில், 13 பேர் பெண்கள். நாட்டில் இதுவே அதிக அளவாகும் , என்றார்.