நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்கா டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 68. இரஞ்சித் சின்ஹா இந்தியக்காவல் பணியின் 1974-ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த அதிகாரியாக தன பயணத்தைத் தொடங்கியவர். இந்திய-திபெத் எல்லைக் காவல்படை (ITBP) மற்றும் இரயில்வே பாதுகாப்புப் படைகளில் தலைமை காவல் இயக்குநராக பணிபுரிந்தவர்.
இன்று அதிகாலை 4:30 மணிக்கு ரஞ்சித் சின்ஹாவின் உயிர் பிரிந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது. கோவிட் நோய் பாதிப்பு தொடர்பான மரணமாக இருக்கலாம் என்று மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று ( ஏப்ரல் 15) இரவு சின்ஹாவுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிக்கின்றன.
பள்ளி மற்றும் கல்லூரிக்கல்வியை பாட்னாவில் முடித்தவர் ரஞ்சித் சின்ஹா. இவரது தந்தை என்.எஸ். சின்ஹா பீஹார் மாநில அரசில் விற்பனைவரி ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.