இந்தியாவின் மிகவும் தனித்துவம் வாய்ந்த சுற்றுலா தளம் மேகாலயாவில் உள்ள லிவிங் ரூட் பிரிட்ஜ், கர்நாடகாவில் உள்ள ஹக்கி பிக்கி பழங்குடி கிராமம் போல ஷில்லாங் அருகில் உள்ள கோங்தாங் கிராமமும் மிகவும் வித்தியாசமான சுற்றுலாத்தலமாகும்.



மேகாலாயா நாட்டின் தலைநகர் ஷில்லாங்கில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் பசுமையான கிழக்கு காசி மலையின் மடியில் அமைந்துள்ளது கோங்தாங் கிராமம். பைனுர்ஸ்லா மற்றும் சோஹ்ரா மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த அமைதியான கிராமத்தில் சுமார் 900 நபர்கள் வசித்துவருகின்றனர். இது 'இந்தியாவின் விசில் கிராமம்' என்று பிரபலமான அழைக்கப்படுகிறது.





இசை பெயரின் பின்னணி:

கோங்தாங் கிராமத்தில் ஒரு விசித்திரமான பழக்கம் உள்ளது. அதாவது இங்கு வசிக்கும் கிராமவாசிகளை அவர்களின் பெயரை சொல்லி அழைக்காமல் ஒரு குறிப்பிட்ட ட்யூனால் அழைக்கிறார்கள். பிறந்த குழந்தைகளுக்கு வழக்கமான ஒரு பெயரும் ஒரு இசை ட்யூனையும் வைப்பார்களாம். இந்த தனித்துவமான ட்யூனை வைத்தே ஒருவரையொருவர் அழைத்து கொள்கிறார்கள். குழந்தை பிறப்பதற்கு முன்னரே தாய் தனது குழந்தைக்காக ஒரு ட்யூனை தயார் செய்து வைத்து கொள்கிறார். குழந்தை பிறந்த உடன் அதனுடைய காதுகளில் தாய் இந்த ட்யூனை பாடினால் அது உடனே குழந்தையின் பெயராகி விடுகிறது. பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு "ஜிங்ர்வாய் லாபே" எனப்படும் அதாவது தாயின் காதல் பாடல் என்று அர்த்தமாம்.  


 




தனித்தனி ட்யூன்:

இந்த தனித்தன்மை வாய்ந்த ட்யூன் இரண்டு நிலைகளை கொண்டது. ஒன்று தாய் குழந்தைக்கு வைக்கும் ட்யூன் , மற்றொன்று குழந்தை வளர்ந்த பிறகு பெற்றோர்க்கும் மற்ற கிராம வாசிகளையும் அழைப்பதற்காக தாங்களே உருவாக்கும் ட்யூன்.
 
இந்த கிராமத்திற்குள் நுழைந்த உடன் விசில் அல்லது ஓசைகள் இடும் சத்தம் கேட்கலாம். குழந்தைகளை உணவு அருந்த வீட்டிற்கு அழைப்பதற்காகவோ அல்லது நண்பர்களை விளையாட அழைப்பதற்காகவோ ஒருவரையொருவர் இப்படி ஓசை இட்டு அழைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் நீண்ட தூரம் வரை ஓசை மூலம் தொடர்பு கொள்ள முடிகிறது. ஆனால் இந்த பாரம்பரியத்தின் தோற்றம் பற்றின தகவல்கள் அறியப்படவில்லை.  எந்த ஒரு இடையூறுகளும் இல்லாத அமைதியான பசுமை நிறைந்த கிராமம் சுற்றுலாவாசிகளை தன் வசம் ஈர்க்கிறது. ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு கடந்த நவம்பர் மாதம் கோங்தாங் கிராமத்தை சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்ந்தெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண