கான்பூரில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந், தனது பால்கயகால நண்பரை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்ததோடு, அவரது 51-வது திருமண நாளினை முன்னிட்டு கேக் வாங்கிச்சென்று கொண்டாடியுள்ள சம்பவம் நண்பரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய குடியரசுத்தலைவர் ராம் கோவிந்த் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக உத்தரப்பிரதேசம் மாநிலத் கான்பூருக்கு சென்றுள்ளார். சுமார் 15 ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமிற்கு பிறகு ரயிலில் சென்ற பெருமையினை பெற்றுள்ளார் ராம்நாத் கோவிந்த். டெல்லியில் இருந்து சிறப்பு ரயிலின் மூலம் கான் கான்பூர் வந்த அவர் அவரது சொந்த ஊரில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில் சந்தித்து வருகிறார். குறிப்பாக முக்கியப்பிரமுகர்கள் அனைவரையும் கான்பூரில் உள்ள அரசு விருத்தினர் மாளிகையில் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்த குடியரசுத்தலைவர் தனது சிறு வயது நண்பரான துணி வியாபாரியான கே.கே அகர்வாலை மட்டும் அவரது வீட்டில் சந்திக்க முடிவெடுத்திருந்தார்.
இதனையடுத்து தனது குடும்பத்தினருடன் தனது நண்பர் வீட்டிற்கு சென்ற குடியரசுத்தலைவர், அவரது நண்பர் கே.கே அகர்வாலின் 51 ஆவது திருமண நாளினை முன்னிட்டு கேக் வாங்கி சென்று கொண்டாடியுள்ளார். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியனை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து குடியரசுத்தலைவரின் நண்பர் கே.கே அகர்வால் தெரிவிக்கையில், தனது குழந்தைக்கால நண்பர் சுதாமாவை எப்படி கிருஷ்ணர் மீண்டும் சந்திக்க வந்தது போல் ராம்நாத் கோவிந்த் வந்துள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் கான்பூரில் தனது கிராம மக்களை சந்தித்து மக்களிடையே உரையாற்றிய ராம்நாத் கோவிந்த், என்னைப்போன்று ஒரு சாதாரண கிராமத்தினைச்சேர்ந்த ஒருவர், நாட்டின் மிக உயர்ந்த பதவியினை அடைய முடியும் என்று நான் கனவில் கூட நினைத்தது இல்லை. ஆனால் இந்திய நாட்டின் ஜனநாய அமைப்பு இதனை சாத்தியமாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதோடு நான் பிறந்த கிராமத்திற்கு நன்றி கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்த ராம்கோவிந்த், உங்களுடைய ஆதரவு மற்றும் அன்பும் எப்பொழுதும் கிடைக்கிறது என பெருமிதம் கொண்டார்.
முன்னதாக 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கான்பூர் வந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர். மேலும் தனது கிராமத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக மண்ணினை தொட்டு வணங்கினார் குடியரசுத்தலைவர்.