கேரளாவில் தலித் போராட்ட வரலாற்றை எழுதும் போது அய்யன்காளி பெயரையோ அவர் போராட்டங்களை புறம்தள்ளி எழுத இயலாது. அப்பேர்ப்பட்ட ஆளுமை தான் அய்யன்காளி. கேரளாவில் உள்ள ஒடுக்கப்பட்டோருக்கு குரல் குடுப்பதில் முதன்மையாக இருந்தவர்.அன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுக்க பரவிய கொடும் நோய் சாதிய வேற்றுமை மற்றும் தீண்டாமை. அதில் இருந்து மக்களை மீட்க பல தலைவர்கள் போராடினர். அவர்களில் ஒருவர் அய்யன்காளி. தன்னை சுற்றி உள்ளவர்களை அடிமைகளாக நடத்தப்படுவதைப் பார்த்து தனது சிறு வயதிலேயே வேதனை அடைந்தார்.


அய்யன் காளியின் ஆரம்ப காலங்கள்:






கேரளத்தின் திருவிதாங்கூரில் என்ற ஊரில் பிறந்தவர் அய்யன் காளி.  புலையர் என்ற ஜாதியில் பிறந்ததால் கல்வி அவருக்கு மறுக்கப்பட்டது, பொது வீதிகளில் நடக்க அனுமதி இல்லை, செருப்பு போட அனுமதி இல்லை, புலையர் சாதி பெண்கள் மேல் உடை அணிய அனுமதி இல்லை என எண்ணற்ற கொடுமைகள் இருந்தது. அது மட்டுமல்லாமல், மாடுகளுக்கு பதிலாக புலையர்களை கட்டி உழும் கொடிய வழக்கம் அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்தது. நாயர்களும், நம்பூதிரிகளும் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலம் அது. இத்தகைய சூழலில் வளர்ந்து வந்த அய்யன்காளி நம்மை எதை சொல்லி அடக்குகிறார்களோ அதை வைத்து நாம் முன்னேற வேண்டும் என குரல் கொடுக்கத் தொடங்கினார்.


முன்னெடுத்த போராட்டங்கள்: 




அய்யன்காளி  முன்னெடுத்த போரட்டங்களை முதன்மை வாய்ந்தது மாட்டுவண்டி வீதி போராட்டம், பள்ளி நுழைவு போராட்டம் மற்றும் கேரளாவின் முதல் தொழிலாளர் போராட்டம் என மக்களை திரட்டி கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தார் மற்றும் கல்வி, சமூகத்தில் சுயமரியாதை, கோயில்களில் உள் நுழைய வழிபாட்டு உரிமை, ஓய்வு இல்லாத கட்டாய முறையை ஒழிக்க, பெண் மேலாடை அணிய இருத்த தடை ஆகியவற்றுக்காகவும்  போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றியும் கண்டுள்ளார். அதைத்தொடர்ந்து, இவர் சாது ஜன பரிபாலன சங்கம் என்ற அமைப்பை சதானந்த சாமிகளின் உதவியுடன் தொடங்கினார். இதன் முதன்னை நோக்கம் கல்வி மறுக்கப்பட்ட தலித் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது ஆகும்.


சட்டமன்றம் வரை ஒலித்த குரல்:




அய்யன்காளி சமுதாயத்தில் கண்ட பிரச்சினைகளை மற்ற சமூகத்தினரும் பட கூடாது என்பதற்காக பிரஜா சபை என்ற தொகுதியில் இருந்து சட்டமன்றத்தின் உறுப்பினராக தெர்தெடுக்கப்பட்டார். அந்த பதவியில் 20 ஆண்டுகள் இருந்து தொண்டாற்றினார். இவரின் அயராத உழைப்பை கண்டு வியந்த காந்தியடிகள் 1937-ல் கேரளா சென்று இவரை சந்தித்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்த அய்யன்காளி தனது 78-வது வயதில் உடல் நலக் குறைவால் மறைந்தார்.