காஷ்மீரில் என்கவுன்டர்: பதுங்கியிருந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி சுட்டுக் கொலை

Jammu Kashmir Terrorist Killed: காஷ்மீரில் பதுங்கியிருந்த டி.ஆர்.எஃப் பயங்கரவாத அமைப்பு தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

Continues below advertisement

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். லஷ்கர் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டின் (டிஆர்எஃப்) முக்கிய புள்ளியாக இருந்த பாசித் தாரும் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

Continues below advertisement

பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நேற்று தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியின் பயங்கரவாதிகள் இருப்பதை கண்டறிந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.  இந்த தாக்குதலானது, இன்று செவ்வாய்க்கிழமை வரை நீடித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.  இத்தாக்குதலில் லஷ்கர் ஆதரவு பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டின் (டிஆர்எஃப்) முக்கிய புள்ளியாக இருந்த பாசித் தாரும் என்கவுன்டரில் கொல்லப்பட்டார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

முக்கிய புள்ளி கைது:

பாதுகாப்பு ஏஜென்சிகளின்  Most Wanted List ('மோஸ்ட் வான்டட் லிஸ்ட்டில்' ) இருந்தவர்களில் பாசித் தார் என்பவரும் ஒருவர். ஏற்கனவே, இவர் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

காவல்துறையினர் மற்றும் பொதுமக்களைக் கொன்ற 18க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்ததாக காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola