The Kerala Story: சர்ச்சைக்குள்ளான தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


பரபரப்பை கிளப்பிய 'தி கேரளா ஸ்டோரி':


கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற கதைக்களத்துடன் ‘தி கேரளா ஸ்டோரி’ எனும் படம் மே 5ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில்  நடிகைகள் அதாஷர்மா, சித்தி இத்னானி, யோகிதா பிஹானி,  சோனியா பாலானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சுதிப்தோ சென் இந்தப் படத்தை  இயக்கியுள்ளார். 


இந்த படத்தில் கேரளாவைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு  மாற்றப்பட்டு இஸ்லாமிய நாடான ஈராக் மற்றும் சிரியாவில் ISIS அமைப்பில் சேருவதாக எடுக்கப்பட்டுள்ளது. இது உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது எடுக்கப்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் முன்னதாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானபோதே கடும் சர்ச்சைகளை கிளம்பியது. 


மே.வங்க முதல்வர் உத்தரவு


அதனால் இப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி கேரளா மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, பெரும் சர்சைக்கு மத்தியில் இப்படம் மே 5ல் வெளியாகியதும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதனை அடுத்து,நேற்று முதல் தமிழ்நாட்டில் இந்த படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன.


இந்நிலையில், தற்போது தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ”வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்ளை தவிர்த்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்.  ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் ஒரு தரப்பினரை இழிவுப்படுத்தியது. தற்போது ’தி கேரளா ஸ்டோரி' திரிக்கப்பட்ட கதையாக வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் பாஜக தான் நிதியுதவி செய்துள்ளது” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க 


Seeman: மாணவியின் உள்ளாடையை கழட்டச் சொல்வதா? மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல்...! சீமான் ஆவேசம்...!


OPS - TTV Dinakaran: தினகரனை வீட்டிற்கே சென்று சந்தித்த ஓ.பி.எஸ்...! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!