தென்னிந்தியாவின் முக்கிய மாநிலமாக திகழ்வது தெலங்கானா. இங்கு நடந்த சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில், மாநிலம் உருவானது முதல் ஆட்சியில் இருந்த சந்திரசேகர் ராவின் பி.ஆர்.எஸ். கட்சி படுதோல்வி அடைந்து காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.






ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்:


இதையடுத்து, காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தில் புதியதாக ஆட்சியை அமைக்க உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் முதலமைச்சராக அனுமுலா ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இன்று மதியம் ரேவந்த் ரெட்டியை தெலங்கானா மாநில டி.ஜி.பி. அஞ்சனி குமார் நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார்.


தெலங்கானாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதன்படி, தற்போதைய நிலவபரப்படி, மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது வரை 64 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி தெலங்கானாவில் அடுத்து ஆட்சியை அமைப்பது உறுதியாகியுள்ளது.


அரசு அதிகாரிகள், காவல்துறையினர் வாழ்த்து:


அந்த கட்சியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ரேவந்த் ரெட்டி கருதப்படுகிறார். இதையடுத்து, அந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவரான ரேவந்த் ரெட்டியே புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இதையடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இந்த சூழலில், இன்று தெலங்கானா டி.ஜி.பி. அஞ்சனிகுமாருடன் மற்றொரு காவல்துறை உயரதிகாரி சஞ்சய் ஜெயின், மகேஷ் பக்வத் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். வழக்கமாக, பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி மாறும்போது அரசு உயரதிகாரிகளும், காவல்துறை உயரதிகாரிகளும் புதியதாக ஆட்சியை நேரில் சந்திப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.


அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மாநில டி.ஜி.பி.யை இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை தெலங்கானாவில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி தெலங்கானா டி.ஜி.பி. அஞ்சனி குமாரை தேர்தல் ஆணையம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.


மேலும் படிக்க: Telangana Election Results: ஆட்சியை இழந்த சந்திரசேகர் ராவ்: தோல்விக்கான காரணங்கள் என்ன? - ஓர் அலசல்


மேலும் படிக்க: கே.சி.ஆர், ரேவந்த் ரெட்டிக்கு தண்ணிகாட்டிய பாஜக வேட்பாளர்... கமாரெட்டி தொகுதியில் பாஜக கொடுத்த ஷாக்