இந்தியாவில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு குறித்து நாடு தழுவிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதை அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரீஃபாம்(ADR) அமைப்பு நடத்தியது.


இவ்வறிக்கையில் வெளியிட்ட தகவல்களின்படி, எம்.எல்.ஏகளின் மீது இருக்கும் கிரிமினல் வழக்குகள், கொலை வழக்குகள், மாநில அளவிலும் கட்சி அளவிலும் எம்.எல்.ஏகளின் பாலினம் குறித்து இன்னும் சில அடிப்படைகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியாவில் அதிக சொத்து மதிப்பை கொண்ட எம் எல் ஏகளின் பட்டியலில் முதலில் இருப்பவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டி.கே சிவகுமார். இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூபாய் 1,413 கோடி என ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, குறைந்த சொத்து வைத்திருப்பரின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவர் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ நிர்மல் குமார் தாரா. இவரின் சொத்து மதிப்பு வெறும் ரூ. 1,700 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு:




அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரீஃபாம் என்னும் அமைப்பு இந்தியாவில் உள்ள அனைத்து எம்எல்ஏக்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி இதன் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.


நாட்டிலேயே அதிக சொத்துக்களை வைத்திருக்கும் பட்டியலில் முதலில் இருப்பவர் கர்நாடக மாநிலத்தின் துணை-முதலமைச்சர் டி.கே சிவகுமார் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு  சுமார் ரூ. 1,413 கோடி ஆகும். இப்பட்டியலில் இரண்டாவது உள்ளவர் கர்நாடக சுயேட்சை எம்.எல்.ஏ கே.எஸ்.புட்டசாமி கவுடா ரூ.1,267 கோடியும் மூன்றாவது இடத்தில் பிரியா கிருஷ்ணாவுக்கு ரூ.1,156 கோடி சொத்துகள் உள்ளன என ஆய்வின் முடிவில் தெரிய வருகிறது. முதல் மூணு இடத்தில் அதிக சொத்து வைத்திருக்கும் நபர்கள் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, நாட்டில் குறைந்த சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த நிர்மல் குமார் தாரா என்ற எம்.எல்.ஏ வெறும் ரூ1,700 தான் சொத்தாக வைத்துள்ளார்.


இந்த ஆய்வு குறித்து டி.கே சிவகுமாரிடம் கேட்கும்போது அவர் கூறியது ”நான் ஒன்றும்  பணக்காரனும் இல்லை அதே சமயத்தில் ஏழையும் இல்லை எனக்கும் இருக்கும் சொத்துகள் அனைத்து நீண்ட காலம் முன்பு வாங்கியவை” எனத் தெரிவித்தார். 


மேலும் ஏடிஆர் ஆய்வறிக்கை தகவலின்படி, “44 சதவீத எம்.எல்.ஏக்கள் கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள். இதில் அதிகபட்சமாக டெல்லியில் உள்ள எம்.எல்.ஏக்களே அதிகம் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் அதிக சொத்துக்கள் கொண்ட எம்.எல்.ஏக்களின் பட்டியலில் முதல் 10 பேர்கள்:


1) டி.கே.சிவக்குமார் (INC): கனகபுரா தொகுதி, கர்நாடகா 2023; மொத்த சொத்து மதிப்பு ரூ.1,413 கோடி.


2) புட்டசாமி கவுடா (IND): கௌரிபிதனூர் தொகுதி, கர்நாடகா 2023; மொத்த சொத்து மதிப்பு ரூ.1,267 கோடி


3) ப்ரியா கிருஷ்ணா (INC): கோவிந்தராஜநகர் தொகுதி, கர்நாடகா 2023; மொத்த சொத்து மதிப்பு ரூ.1,156 கோடி.



4) சந்திரபாபு நாயுடு (TDP): குப்பம் தொகுதி, ஆந்திரப் பிரதேசம் 2019; மொத்த சொத்து மதிப்பு ரூ.668 கோடி.



5) ஜெயந்திபாய் சோமாபாய் பட்டேல் (BJP): மான்சா தொகுதி, குஜராத் 2022; மொத்த சொத்து மதிப்பு ரூ.661 கோடி.


6) சுரேஷா (INC): ஹெப்பல் தொகுதி, கர்நாடகா 2023; மொத்த சொத்து மதிப்பு ரூ.648 கோடி.


7) ஜெகன்மோகன் ரெட்டி (YSRCP): புலிவெந்துலா தொகுதி, ஆந்திரப் பிரதேசம் 2019; மொத்த சொத்து மதிப்பு ரூ.510 கோடி.


8) பரக் ஷா (BJP): காட்கோபர் கிழக்கு தொகுதி, மகாராஷ்டிரா 2019; மொத்த சொத்து மதிப்பு ரூ.500 கோடி


9) டி.எஸ்.பாபா (INC): அம்பிகாபூர் தொகுதி, சத்தீஸ்கர் 2018, மொத்த சொத்து மதிப்பு ரூ.500 கோடி


10) மங்கல்பிரபாத்லோதா (BJP): மலபார் ஹில் தொகுதி, மகாராஷ்டிரா 2019; மொத்த சொத்து மதிப்பு ரூ.441 கோடி.


இந்தியாவில் குறைந்த சொத்துக்கள் கொண்ட எம்.எல்.ஏக்களின் பட்டியலில் முதல் 10 பேர்கள்:


1) நிர்மல் குமார் தாரா (BJP): இண்டஸ் தொகுதி, மேற்கு வங்கம் 2021; மொத்த சொத்து மதிப்பு ரூ.1,700.


2) மகரந்த முதுலி (IND): ராயகடா தொகுதி, ஒடிசா 2019; மொத்த சொத்து மதிப்பு ரூ.15,000.


3) நரிந்தர் பால் சிங் சவுனா (AAP): ஃபாசில்கா தொகுதி, பஞ்சாப் 2022; மொத்த சொத்து மதிப்பு ரூ.18,370.


4) நரிந்தர் கவுர் (AAP): சங்ரூர் தொகுதி, பஞ்சாப் 2022; மொத்த சொத்து மதிப்பு ரூ.24,409.


5) மங்கள் கலிண்டி (JMM): ஜுக்சலை தொகுதி , ஜார்கண்ட் 2019; மொத்த சொத்து மதிப்பு ரூ.30,000.


6)புண்டரிகாக்ஷ்யா சாஹா (AITC): நபத்வீப் தொகுதி, மேற்கு வங்காளம் 2021; மொத்த சொத்து மதிப்பு ரூ.30,423.


7) ராம் குமார் யாதவ் (INC): சந்திராபூர் தொகுதி, சத்தீஸ்கர் 2018; மொத்த சொத்து மதிப்பு ரூ.30,464.


8) அனில்குமார் அனில்பிரதான் (SP): சித்ரகூட் தொகுதி, உத்தரப் பிரதேசம் 2022; மொத்த சொத்து மதிப்பு ரூ.30,496.


9) ராம் டாங்கூர் (BJP): பந்தனா தொகுதி, மத்திய பிரதேசம் 2018; மொத்த சொத்து மதிப்பு ரூ.50,749.


10) வினோத் பிவா நிகோல் (CPI(M)): தஹானு தொகுதி, மகாராஷ்டிரா 2019; மொத்த சொத்து மதிப்பு ரூ.51,082