குப்பைகளை சாப்பிட்டுக்கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை புகைப்பட கலைஞர் ஒருவர் மீட்டு , அவருக்கு மறுவாழ்வு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் :


கடந்த புதன் கிழமை மகாராஸ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்வாவின் விட்டவா பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் குப்பைகள் கொட்டும் இடத்தில் அமர்ந்து அங்குள்ள குப்பைகளை கிளறிய அவற்றை சாப்பிட்டுக்கொண்டிருக்க , இதனை அவ்வழியாக சென்ற பிரசாந்த் நர்வேகர்  என்னும் புகைப்பட பத்திரிக்கையாளார் புகைப்படம் எடுத்திருக்கிறார். இவர் மும்பையில் உள்ள பிரபல பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்படம் எடுத்து கடந்து செல்லாமல் , மனிதாபிமானத்துடன் அவர் குறித்த விவரங்களை சேகரிக்க துவங்கியிருக்கிறார். இதற்காக புகைப்பட பத்திரிக்கையாளார் தானே குடிமை அமைப்பின் பிராந்திய பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் கல்வா காவல்துறையின் உதவியை நாடினார்.


 




குணமான இளைஞர் :



இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை, நர்வேக்கரே அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார், மேலும் தானே குடிமக்கள் மன்றத்தின் தலைவர் காஸ்பர் அகஸ்டினுக்கும் இளைஞரின் நிலை குறித்து தெரிவித்திருக்கிறார். இருவரும் சேர்ந்து , காவல்துறை உதவியுடன் மருத்துவர்  சஃபியா அக்தரை சந்தித்து நடந்தவற்றை கூறியிருக்கின்றனர். பின்னர் சஃபியா பாதிக்கப்பட்ட இளைஞரை தானே மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஒரு வாரத்தில் 50 சதவிகித முன்னேற்றத்தை கண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த இளைஞர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவர் பிகாரை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் . அவர் பிழைப்பிற்காக மும்பை வந்திருகிறார்.பல இடங்களில் முயன்றும் வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. தனது தாய் , தந்தையை பார்க்க வேண்டும் என கூறிய இளைஞர் எப்படி குப்பை தொட்டி அருகில் சென்றேன் என தெரியவில்லை என்கிறார். விரைவில் அவர் 100 சதவிகிதம் குணமாகிவிடுவார் என்கின்றனர் மருத்துவர்கள் .


மனிதாபிமானம்  மிக்கவர்களின் கருத்து :



மேலும் மனிதாபிமானத்துடன் செயல்பட்ட புகைப்பட பத்திரிக்கையாளருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.இது குறித்து கூறிய பிரசாந்த் நர்வேகர்  “"இறுதியாக, இந்த இளைஞனுக்குப் புதிய வாழ்வு அளிக்கும் எங்கள் நோக்கம் வெற்றியடைந்தது" என்றார்.
இந்த சம்பவம் குறித்து பேஇச்ய  அகஸ்டியன் "தானே பேரிடர் மேலாண்மைக் குழுவின் உதவியுடன், எங்கள் குழுவினர் அந்த நபரைத் தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றினர். காவலர் பிரம்ஹானந்த் பாட்டீல் கடைசி வரை எங்களுக்கு நிறைய உதவினார்." என்றார். மீட்பு குழுவினர் இது குறித்து கூறுகையில் “அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு சட்டப்பூர்வ அனுமதி கோரி, அந்த நபர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அந்த நபரை நீதிமன்றத்தின் மூன்றாவது மாடிக்கு நடக்கச் செய்வது கடினமான பணியாக இருந்தது ” என்றனர்