நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், கரநாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூர். இங்கு கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.














திடீரென கொட்டித்தீர்த்த இந்த கனமழையால் பெங்களூர் நகரம் முழுவதும் மழைநீரில் மூழ்கி தத்தளித்து வருகிறது என்றே கூறலாம். நகரின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வடிவதற்கு வழியின்றி தேங்கியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் முட்டியளவு மழைநீர் வழிந்தோடுகிறது.














பெங்களூர் விமான நிலையத்திலும் மழைநீர் சூழ்ந்தது. சில பகுதிகளில் மழைநீரில் பேருந்து சிக்கிக்கொண்டது. பின்னர். பயணிகளும், பொதுமக்களும் மழைநீரில் சிக்கிய பேருந்தை கயிறு கட்டி மீட்டனர். இதுபோன்று, நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச மழையாக இது பதிவாகியுள்ளது. பெங்களூரில் சராசரியாக 131 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழையால் பெங்களூர் முழுவதும் தத்தளிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பெங்களூரின் இந்த நிலைக்கு காரணம் யார்? என்று பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.