முதல் டோஸ் தடுப்பூசி எடுத்து சில நாட்களுக்கு பிறகு தனக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நடிகை நக்மா கூறியுள்ளார். நக்மா கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2014 லோக்சபா தேர்தலில் மீருட் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவர் டெபாசிட் இழந்து தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Had taken my 1st dose of Vaccine a few days ago tested for Covid-19 yest, my test has come ‘Positive’ so Quarantined myself at home. All Please take care and take al necessary precautions even after taking the 1st dose of Vaccine do not get complacent in anyway manner <a >#staysafe</a> !</p>— Nagma (@nagma_morarji) <a >April 7, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
1990ம் ஆண்டு பாலிவுட் உலகில் அறிமுகமானார் நக்மா, அறிமுகமான சில ஆண்டுகளிலேயே ஹிந்தி மட்டும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். 1994ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படம் தான் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம். போஜ்புரி மொழியில் நடித்த வெகு சில நடிகைகளில் நக்மாவும் ஒருவர். இறுதியாக 2008ம் ஆண்டு தேளா நம்பர் 1 என்ற படத்தில் நடித்த அவர் அதன் பிறகு முழுநீள அரசியலில் ஈடுபட்டு வருகின்றார்.