நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, மகாராஷ்டிரா, டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.




 


இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்திலும் கொரோனா பரவலை தடுக்க அம்மாநில அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்  என்று அரசு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும், போக்குவரத்து மற்றும் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.