இன்று இரவு 7 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும் ‘‘தேர்வுக்கு தயாராவோம்’’ நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.
முன்னதாக, தனது ட்விட்டரில் இது குறித்து பதிவு செய்த அவர், ‘‘புதிய வடிவில், பரந்தளவிலான பாடங்கள் பற்றி பல சுவாரஸ்யமான கேள்விகள் மற்றும் தேர்வெழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் மறக்கமுடியாத விவாதம். ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 7 மணிக்கு ‘தேர்வுக்கு தயாராவோம்’ நிகழ்ச்சியை பாருங்கள்" என்று தெரிவித்தார்.
பிரதமரின் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றத்திலிருந்து விடுபட்டு, நம்பிக்கையுடன் தேர்வு எழுத பயன்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை மத்திய கல்வி அமைச்சகம், பிரதமர் அலுவலக வலைதளங்கள், டிடி நேஷ்னல், டிடி நியூஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இன்று மாலை ஏழு மணி முதல் நேரடி ஒளிபரப்பை காணலாம்.